பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 16.1

32. மீண்டும் புலம்புதல் (ஊடலால் பிரிந்த காலத்திலே, காதலர்கள் தாம் கூடியிருந்த காலத்து நிகழ்ந்த இன்ப சுகங்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பொருமுவது இயல்பு. அந்த நிலையிலே, தான் சிங்கியொடு கூடியிருந்தபோது நடந்த சம்பவங்களை எல்லாம் நினைத்து நினைத்துப் புலம்புகின்றான் சிங்கன்.) -

சிங்கியைக் காணேனே! என் ஆசைக்கு உரிய என் சிங்கியைக் காணேனே! என் சிங்கியைப் பசிய கிளிப் பேட்டினைப் போன்றவளை, சீர்மை பெருகிய குற்றால நாதரின் திருநாம வளத்தைப் பாடிய சங்கீதக்கடலை, இங்கிதம் அறிந்த பெண்மணியைச் சல்லாபத்துக்கு உகந்தவளை. உல்லாச மோகனச் சிங்கியைக் காணேனே!

முத்தாரந் தவழுகின்ற தன் தனங்களை மேற்சிலையி னால் மூடி அசைத்துக் கொண்டே ஒரு சமயம் நின்றாள் அதை யானைக் கொம்புகள் என்று எண்ணி என்மேல் கோபத்தை வைத்திருந்த அவளுடைய கண்முன்னே சென்றேன். அந்தச் சுகக்காரி என்னுடைய கொஞ்சத்தனத்தை அறிந்து, தன் பருத்த கொங்கைகளை மூடியிருந்த துணியைத் திறந்துவிட்டாள் அதனைக் கண்ட இந்த பாவியேன் ஆவியையே அந்த நொடியில் மறந்து விட்டேன்' என் ஆசை திருமாறு, என் உள்ளம் கனிய என்னை மயக்கித் தழுவியணைத்துத் தன் சிருங்கார மோகனவலையிலே என்னை அவள் சிக்க வைத்துக் கொண்டாள். அந்தச் சிங்கியை இப்போது காணேனே!

பூவென்றிருக்கும் அவள் பாதங்களை வருடி வருடியும், புளகித்திருந்த அவள் கொங்கைகளை நெருடி நெருடியும், அம்புகளையொத்த அவள் கண்களுக்கு ஒப்பற்ற அஞ்சனமை யினைத் திட்டியும் விட்டேன். என் வாயிலே எடுத்த வெற்றிலைச் சுருளைத் தன் வாயிதழ்களால் இறுக்கிப் பறித்தாள். 'வா’ என்று சொல்லிக் கையிலிருந்த சுருளைக் கொடுத்தால், 'தா' என்று சொல்லி வாங்கமாட்டாள். அவள் மனக்குறிப்பினைப் பார்த்து நான் அவள் மேனியிலே நகக் குறிகள் பலவும் வைப்பேன். அதன்பின், 'ஆ' என்று ஒருமுறை தன் கால்களால் என்னை எட்டி உதைத்துத் தள்ளுவாள். அந்த