பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

உதையைப் பெறுவதற்கு என் பேய்மனம் இப்போதெல்லாம் கிடந்து கொதியாய்க் கொதிக்கிறதே!

மாலைகள் ஆடிக்கொண்டிருக்கும் குன்றிமணி மாலை யினை ஒதுக்கி அவளுடைய பரந்த மார்பினை இறுக்கித் தழுவுவதற்கு நான் வந்தால், அவள் கச்சுப் பொருந்திய தன் கொங்கைகளுக்குச் சந்தனமும் பூசமாட்டாள். அதனை மறுத்து, நான் பூசினாலும் பூசக்கூடாது என்பாள். இவ்வாறு சீராகக் கூடி விளையாடி இப்படி எனக்குத் தீராத மையலைத் தந்த அந்தக் கொடுமைக்காரியைக் கருமேகங்கள் போல விளங்கும் கறையினையுடைய கழுத்தினரான குற்றாலநாதரின் மேலான நாட்டிலே இருக்கின்ற காரியக்காரியை ஆரியப் பாவை போன்றவளை என் சிங்கியைக் காணவில்லையே!

இராகம் - தோடி தாளம் - ஆதி பல்லவி

சிங்கியைக் காணேனே! என் வங்கணச்

சிங்கியைக் காணேனே!

அனுபல்லவி சிங்கியைக் காமப் பசுங்கிளிப் பேடையைச்

சீர்வளர் குற்றாலர் பேர்வளம் பாடிய சங்கீத வாரியை இங்கித நாரியைச்

சல்லாபக் காரியை உல்லாச மோகனச் (சிங்கி)

சரணங்கள் ஆரத் தனத்தைப் படங்கொண்டு மூடி

அசைத்துநின்றாளதை யானைக்கொம் பென்றுநான் கோரத்தை வைத்த விழிக்கெதிர் சென்றே னென்

கொஞ்சத் தனத்தை அறிந்து சுகக்காரி பாரத் தனத்தைத் திறந்துவிட் டாள்கண்டு

பாவியேன் ஆவி மறந்துவிட்டேனுடன் தீரக் கணிய மயக்கி முயக்கியே

சிங்கார மோகனம் சிங்கி கொண்டாளந்தச் (சிங்கி)