பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 9

றிருப்பவள். திருமேனி, சிறந்த தன் செங்கையிலேயுள்ள ஸ்படிகமணி போலவே வெளுப்பாக விளங்கப் பெற்றிருப் பவள். அறிவின் அதிதேவதையாகிய "ஞானக் கொடி என்னும் அக் கலைமகளையும் இத் திருக்குற்றாலக் குறவஞ்சி இனிது நிறைவேறுவதற்கு அருளுமாறு நாம் போற்றுவோமாக

அடியிணை மலரும் செவ்வாய் ஆம்பலும் சிவப்பி னாளை நெடியங் குழலும் மைக்கண் நீலமும் கறுப்பி னாளைப் படிவமும் புகழும் செங்கைப் படிகம்போல் வெளுப்பாம்ஞானக் கொடிதனைத் திருக்குற் றாலக் குறவஞ்சிக் கியம்பு வோமே.

(படிகம் - படிகமணி. அயிணைமலர், மைக்கண் நீலம், செவ்வாய் ஆம்பல் என உறுப்புகளை மலர்களாகக் கூறியதற்கு ஏற்ப, அவளையும் ஞானக்கொடி என்றதன் நயம் காண்க. 'கொடிதனைக் குறவஞ்சிக்கு இயம்புவோமே என்றதனால், அவளையே மிகவும் துணையாகக் கொண்டிருக்கும் தன்மையும் புலப்படும் வெளுப்பாம் ஞானக் கொடிதனை என்பதற்குப் பதிலாக, வெளுப்பினாளைக் கொடிதனை என்ற பாடபேதமும் உரைப்பர்.)

8. நூலின் பயன்

கையிலே வில்லை ஏந்தியவனாகப் பெரும் கொலைத் தொழிலிலே ஈடுபட்டவனாகிய வேடனுக்கும் நரிக்கும், வேதச் செல்வர்களாகியவர்க்கும், தேவர்கட்கும் இரக்கங் கொண்டவன் முன்னாளிலே அவர்கள் இயற்றிய கொலை, களவு, கள், காமம் குருத்துரோகம் ஆகிய கொடிய பஞ்சமா பாதகங்களையும் தீர்த்து அருளியவன் சிவபெருமான். அதனாலே, நிலவினைச் சூடியவராகிய அக் குற்றால நாதரை நினைத்த பேர்கள், தாம் நினைத்த வரத்தைத் தவறாது பெறுபவர்களாவார்கள் என்பதும் புலப்படும். அங்ங்னம் அனைவரும் நினைக்க வேண்டிப் பல வளமும் சேர அமைந்த இக்குறவஞ்சி நாடகத்தைப் பாடினோம். இதனைப் படிப் பவர்க்கும், படிக்கக் கேட்பவர்க்கும் உறுதியாகப் பலன் உண்டாகும்.