பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

சிலைபெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச்

செல்வருக்கும் தேவருக்கும் இரங்கி மேனாட் கொலைகளவு கட்காமம் குருத்து ரோகம்

கொடியபஞ்ச பாதகமும் தீர்த்த தாலே நிலவணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள்

நினைத்தவரம் பெறுவரது நினைக்க வேண்டிப் பலவளஞ்சேர் குறவஞ்சி நாடகத்தைப்

படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலனுண் டாமே. (பஞ்சமா பாதகங்களை இறைவன் தீர்த்த வரலாறு களையெல்லாம் திருக்குற்றாலத் தலபுராணத்துள் காண்க. அதுவும் இந்நூலாசிரியரால் செய்யப்பட்டதேயாகும். சிலை - வில், வேதச் செல்வர் - வேத பாராயணம் செய்யும் வேதியர். பலவளம் - பல வகையான வளம். சொல்வளம் பொருள்வளம் முதலியன)

9. அவையடக்கம்

உலகத்தவர்கள் மலர்த்தாரினைத் தம் தலைகளிலே ஆர்வமுடன் சூட்டிக் கொள்வார்கள். அப்படி விருப்ப முடன் முடிக்கும்போது அம்மலர்களை இணைத்திருக்கும் நாரினை, இது பொல்லாது' என்று கூறித் தனியே ஒதுக்கித் தள்ளி விடுவார்களோ? மாட்டார்கள் அல்லவோ சீர்மை நிரம்பிய தமிழ் மாலைகள் பலவற்றுள் செல்வராகிய குற்றாலத் தீசர் பேரினை மலர்களாகக் கொண்டு யாக்கப் பெற்ற இக்குறவஞ்சி நாடகத்தின் அமைதி எங்ங்ணமாயினும், குற்றாலத் தீசரின் பேரினையுடைய அந்தச் சிறப்பின் காரணமாக வேனும் என் சொற்களைப் பெரியோர்களும் தள்ளாமல் ஏற்றுக் கொள்வார்களாக

தாரினை விருப்ப மாகத்

தலைதனில் முடிக்குந் தோறும்

நாரினைப் பொல்லா தென்றே

ஞாலத்தோர் தள்ளு வாரோ?

சீரிய தமிழ்மா லைக்குட்

செல்வர்குற் றாலத் தீசர்