பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

மார்பினையுடையவன் இவன். அதனால், இவன் அயனே' என்பார் சிலர் அயனாக இருந்தால் சினங்கொண்டு விளங்கும் பாம்பாபரணம் அவனுக்கு ஏது? காதுகளிலே ஒப்பற்ற சங்கக் குண்டலங்கள் ஏது? ஆகவே இவன் அயன் அல்லன்' என்று, அவருக்குப் பதிலுரைப்பார்கள் சில பேர். இராகம் - புன்னாகவராளி தாளம் - சாப்பு ஒரு மானைப் பிடித்து வந்த பெருமானைத் தொடர்ந்துவரும் ஒருகோடி மான்கள்போல் வருகோடி மடவார். 1 புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில் பொங்கரவம் ஏதுதனிச் சங்கம்ஏ தென்பார் 2

(ஒருமான், பெருமான், ஒருகோடி மான் என்பன சொற்பின் வருநிலையணி, மடவார் - மடப்பத்தையுடையவரான கன்னியர். பொங்கரவம் - சினத்துடன் படம் விரித்துத் தோன்றும் பாம்பு. தனிச்சங்கம் - ஒப்பற்ற சங்காபரண மாகிய காதணிகள்)

'பரந்த கருணைக்கடலான திருமாலே இவன்’ என்பார் சிலர். இவன் திருமாலானால் இருவிழிகளின் மேலாக நெற்றிக் கண்ணாகிய மூன்றாவது விழியும் அந்தத் திருமாலுக்கு உளதாமோ? அவன் தலைமேல் சடை முடியும் உண்டோ? எனக் கேட்டு, 'அவன் மாலும் அல்லன்' என்பார்கள் சிலர். 'அவனுடைய இரு பக்கங்களிலும் நான்முகனும் திருமாலும் வருகின்றனர். ஆகையால், அவன் ஈசனே! அவன் திரிகூட ராசனே! என்பார்கள் அவனை அறிந்தவராகிய சிலர்.

விரிகருணை மாலென்பார் மாலாகின் விழியின்மேல்

விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார். 3 இருபாலும் நான்முகனும் திருமாலும் வருகையால் ஈசனிவன் திரிகூட ராசனே என்பார் 4

(விரிகருணை - பரந்த பெருங்கருணை. முடி - தலை, சடா முடி. திரிகூடராசன் - குற்றாலநாதன். திரிகூடராசன் என்றறிந்தும் பெண்களுக்கு அவன்மீது ஆர்வம் பொங்கி எழுகின்றது. ஒவ்வொருவரும் அவன்மேற் காமுற்றுத் தத்தம் நிலை தடுமாறு கின்றனர். ஆடவரைப் பொருது வெல்வோம்’ என வந்த அவர்கள்,