பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

`s

26 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

“எம் தோள்களிலே யாம் பூண்டுள்ள வளைகளும், கழுத்திலே மறுவுடையவனாகிய தெய்வநாயகன் தன் சடையிலே முடித்த வெண்பிறையும் எம் பெண்மதிபோலத் தளர்வுற்று விளங்குகின்றனவே? என்பார்கள் சில பெண்கள். 'நச்சுப் பையினையுடைய பாம்புகளை வளைத்துச் சூடிக் கொண்டிருக்கும் இவனுடைய உடலிலே, கிடந்து வளைந்து கொண்டிருக்கும் அந்தப் பாம்புகட்குத் தான் பசியாதோ? எம்மை வருத்துகின்ற இத்தென்றலைத் தான் புசித்து எம்மைக் காவாதோ? என்பார்கள் சில பெண்கள்.

மெய்வளையும் மறுவுடைய தெய்வநாயகன்முடித்த வெண்மதியும் விளங்குதெங்கள் பெண்மதிபோல் என்பார் 9 பைவளைத்துக் கிடக்குமிவன் மெய்வளையும் பாம்புகட்குப் பசியாதோ தென்றலைத்தான் புசியாதோ என்பார் 1O

'வளையலணிந்த நம் கைகள் தோள்களிலே பதியும் படியாக, இவன் மார்பிலே அழுந்தாமல் நமக்குப் பூரித்து எழுந்திருக்கும் அழகிய முலைகள்தாம் என்ன முலைகளோ? அவை எழுந்ததன் பயனைப் பெற்றிலவே' என்பார்கள் சிலர். 'மேகங்களும் வெட்கமுறும்படி யமைந்த கூந்தலினை அவிழ்ந்து தொங்கச் செய்தான்; நம் கைவளைகளைக் கவர்ந்து கொண்டான், இஃதென்ன மாயமோ? இவன் சடைதரித்த நியாயமும் இதுதானோ? என்பார் மற்றும் சில பேர்கள்.

இவ்வளைக்கை தோளழுந்த இவன்மார்பில் அழுந்தாமல் என்னமுலை நமக்கெழுந்த வன்னமுலை என்பார். 11 மைவளையும் குழல்சோரக் கைவளைகொண் டானிதென்ன மாயமோசடைதரித்த ஞாயமோ என்பார். : 12

(இவ்வாறு, இறைவன் திருவுலா வருகின்றபோது, அவனுடைய பேரழகிலே தம் மனத்தைப் பறிகொடுத்த கன்னியர் அனைவரும், தத்தம் நிலையழிந்த பித்தாகித் தளர்ந்துநின்றனர். இவர்கள் நிலை இப்படி இருக்க, 'வசந்த வல்லி’ என்னும் கட்டழகுக் கன்னி ஒருத்தி வருகின்றாள். அவள் வரவையும், அதன்பின் நிகழ்வையும் எல்லாம் அடுத்து நாம் காண்போம்.)

女女女