பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

மதனனின் சிலையிலே நாணாக விளங்கும் வண்டும், அவற்றுடன் கலந்து உடனே போயிற்று. இனி, இங்கு இவள் பந்தடிக்கும் இந்த நிலையினைக் கண்டால், ஆடவர் உலகமானது என்ன பாடுதான் படுமோ? என்று கவலைப் படுவது போல, அவளுடைய இடையும் துவண்டு துவண்டு வாட்டமடைந்தது. மலர்க்கரசாகிய தாமரை மலரிலே வீற்றிருக்கும் திருமகள் போன்ற நங்கையாகிய அந்த வசந்தசவுந்தரி, அவ்வாறு எழிலுடன் பந்தடித்துக் கொண் டிருந்தாள்.

இராகம் - பைரவி தாளம் - சாப்பு கண்ணிகள் செங்கையில் வண்டு கலின்கலின் என்று

செயம் செயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு

தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும்பகை வென்றனம் என்று

குழைந்து குழைந்தாட மலர்ப் பைந்கொடி நங்கைவசந்த

சவுந்தரி பந்து பயின்றனளே. 1 பொங்கு கணங்குழை மண்டிய கெண்டை

புரண்டு புரண்டாடக் குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு

மதன் சிலை வண்டோட இனி

இங்கிது கண்டுல கென்படும் என்படும்

என்றிடை திண்டாட பங்கய மங்கை வசந்த சவுந்தரி -

பந்து பயின்றனளே. 2 (செங்கை - சிவந்த முன்னங்கை, வண்டு - கரு வளையல்கள். செயம் - வெற்றி, சங்கதம் - சந்தேகம். புலம்பு - ஒலி. குழைதல் - துவள்தல். பொங்குதல் - மிக்கிருத்தல். மண்டுதல் - நெருங்குதல். மங்குல் - மேகம், கூந்தல், மதன்சிலை வண்டு -