பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 37

மதனனின் கருப்பு வில்லிலே நாணாக விளங்கும் சுரும்பு, மலர்ப் பங்கய மங்கை - திருமகள்)

சூடகம் அணியப் பெற்றிருக்கும் முன்கைகளிலே அணிந்துள்ள வெள்ளிய வளையல்கள் தம்மருகே தோன்றக் கண்டு, தோள் வளைகளும் மேலெழுந்தாடின. புனைந் துள்ள பாடகமும், சிறுபாதச் சிலம்பும் மேலும் கீழுமாக எழுந்தாடி அவை அங்கொரு பாவனை கொண்டவை போல ஆடிக்கொண்டிருந்தன. நன்மை விளங்கும் நகரமாகிய திருக்குற்றாலத்து வீதியிலே, அழகிய பொன்கொடி போன்ற ஒயிலினளான அந்த வசந்தவல்லியானவள், நடனம் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு தோகை மயிலினைப் போலவே, ஒய்யாரமாகத் துள்ளித் துள்ளி அவ்வாறு பந்தடித்துக் கொண்டிருந்தனள்,

"இவள் திருமகளோ? இவள் இரதி தேவியோ? இவள் தேவலோகத்து அரம்பையோ? இவள்தான் அன்று அசுரரை மயக்கிய மோகினியோ?” என்று எல்லாம் கண்டோர் தம்மை மறந்து வியந்து நின்றனர். "மனம் முந்தியதோ? விழி முந்தியதோ? கரங்கள் முந்தினவோ?’ என்னும்படியாக, அவள் துள்ளித் துள்ளிப் பந்தாடினாள். சந்திரனைச் சூடியிருக் கின்றவர், குறும்பலாவின் அடியிலே வீற்றிருக்கும் ஈசுவரர்; அவர் உலாவர, அவரைக் காண விரும்பிய தொண்டர் கூட்டம் நெருங்கியிருக்கும் சங்க வீதியிலே, பசிய வளைகளனிந்த நங்கையான வசந்தவல்லியானவள், இவ்வாறாகப் பந்தாடிக் கொண்டிருந்தனள்,

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு

தோள்வளை நின்றாடப் புனை பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு

பாவனை கொண்டாட 15ա நாடகம் ஆடிய தோகை மயிலென

நன்னகர் வீதியிலே அணி

ஆடகவல்லி வசந்த வொய்யாரி

அடர்ந்துபந் தாடினளே! 3