பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 39

ஆண்களோ, இதனைப் பார்க்கப் பிரமன் நமக்கு ஆயிரம் கண்களைப் படைத்தானில்லையே?’ என்றுதான் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தனர்.

கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன் முந்தடியிந் தடியிடைபோய் மூன்றடிநா

லடிநடந்து முடுகி மாதர் சந்தடியில் திருகியிட சாரிவல

சாரிசுற்றிச் சகிமார் சூழப் பந்தடிக்கும் பாவனையைப் பார்க்கவயன்

ஆயிரங்கண் படைத்தி லானே!

(கொத்து பூங்கொத்து, பூங்குழல் அழகிய கூந்தல், முடுகி - விரைந்து. திருகி - சுற்றிச் சுற்றி வந்து. இது கண்டோர் கூறுதல் என்ற முறையிலமைந்தது.)

7. விந்தை! விந்தை!

வசந்த சுந்தரியானவள், இவ்வண்ணம் ஒரு விந்தையான முறையிலே பந்தாடினாள். மந்தரமலை போன்ற முலைகள் தம் பகையோடு அவள் உறவுகொண்டாடுதலைக் கண்டு துள்ளித் துள்ளி ஊசலாடின. அவள் காதுகளிலே விளங்கும் மகரக் குழைகளோ, அவள் துள்ளி விளையாடுதலால் ஊசலாடின. அழகிய விழிகளோ ஆடவர் உள்ளங்களிலே பூசலிட்டுக் கொண்டிருந்தன. இப்படியாகத் தொங்கத் தொங்கத் தொங்கத் தொம்மென அந்த வசந்த வல்லியானவள் பந்தடித்துக் கொண்டிருந்தனள். பொன்னின் ஒளியினிலே, இடையிடையே வந்து தாவும் மின்னலின் ஒளி போலத் தன் தோழிமாருடன் சொல்லாடலின் இனிமையையும் அநுபவிக்க விரும்பி அவருடன் கூடிக் கூடி நன்னகராகிய குற்றாலத்தின் புகழினைப் பாடிப் பாடி, நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம்மென வசந்தவல்லியானவள் தாவியாடிப் பந்தடித் தனள்,