பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 43

10. மயங்கி நின்றாள்! "இளந்திங்களைச் சடையிலே முடித்தவர் இவர் என்பதைக் காண்பாயாக.அதனால், இவரே திரிகூடச் செல்வர் என்பதனையும் அறிவாயாக எவ்விடத்துக்கும் உள்ள சித்து களுக்கு எல்லாம் தலைவர் இவரேதாம்” என்று.நங்கைமார்கள் பலரும் கூறினர். அந்த நன்மொழிகளாகிய தேறலை, வசந்தவல்லியும் ஆர்வமுடனே பருகினாள். மங்கையாம் அந்த வசந்தவல்லி, அதன்பால் மன ஈடுபாடும் கொண்டாள்! அவர்மீது மையலும் கொண்டாள்! விருத்தம் திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய் எங்குள சித்துக் கெல்லாம் இறையவர் இவரே என்று நங்கைமார் பலரும் கூறும் நன்மொழித் தேறல் மாந்தி மங்கையாம் வசந்தவல்லி மனங்கொண்டாள்! மயல்

கொண்டாளே! (சித்து - மாயவித்தைகள். அதனைச் செய்பவர் சித்தர். ‘தேறல் மாந்துவார் மயங்குவதுபோல, அந் நன்மொழி தேறல் மாந்தி அவளும் மயங்கினாள் என்க. மனங்கொள்ளல் - மன ஈடுபாடு கொள்ளுதல்.)

11. உருகினாள் உருகினாள்! அகத்திய முனிவர் போற்றிப் பரவுகின்ற அந்த இனிய வனும் இவன்தானோ? வேதங்களாகிய பலாவின் முழுக் கனியும் இவன் தானோ? அக்கனியிலே வைத்த செந்தேனோ? பெண்களின் கருத்துகளை உருக்குவதற்கென்றே இப்படி எழுந்து உலா வந்தானோ? இளஞாயிறு போன்ற சிவப்பு அழகினையும், அழகிய கழுத்திலே தோன்றும் கறுப்பின் அழகினையும் பாம்பணி விளங்கும் இரு காதுகளின் அழகினையும் காணப்பெற்றால் பொற்பாவைகளும் அந்த அழகுக்கு வசமாகி உருகிவிட மாட்டாவோ?

அவன். அந்த அழகன், அவனைக் கண்டதும் என் மனமும் தானே உருகுகின்றதே? ஒரே மயக்கமாய் வருகின்றதே? 'மோகம்’ என்று சொல்வார்களே, அதுவும் இதுதானோ?