பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

19. மதனனைப் பழித்தல்! மன்மதா நின் கையிலேயுள்ள கரும்புவில் எதற்காக? அதிற்பூட்டி எய்யும் மலர்க்கணைகள் தாம் எதற்காக? நீதான் எதற்காக? செக்கச் சிவந்து தோன்றுகின்றதே. இந்தப் பாவி நிலவு. இது ஒன்றே போதாதோ என்னை வதைப்ப தற்கு? மையிட்ட கருங்கண்ணினளான இரதிதேவியினிடத் திலே மோகமயக்கம் கொண்டவனே! இடபத்தின் மேலேறி வரும் குற்றால நாதரிடத்திலே நான் மையல் கொண்டால், உனக்கு என்மீது என்னதான் பொல்லாப்போ! அதனைக் கூறுவாயாக!

எல்லாத் திசைகளிலே யிருந்தும் தென்றலாகிய புலிவந்து என்மேற் பாய்கின்றதே, மன்மதா குயிலின் குரலாகிய எக்காளம் ஒலித்தபின்னர், எனக்கு அன்னமும் பிடியாமற் போய்விட்டதே, மன்மதா என் அக்காள்' என்று சொல்லத் தக்க என் தோழியானவள், வெட்கமில்லாமல் என்னை ஏசுவாளே மன்மதா அஃதல்லாமல் என்னைப் பெற்ற தாயும் ஒரு பொல்லாத, நீலியாயிற்றே! என்ன செய்வேன் மன்மதா! இராகம் - எதுகுலகாம் போதி தாளம் - சாப்பு கண்ணிகள் கைக்கரும் பென்ன கணையென்ன நீயென்ன மன்மதா - இந்தச் செக்கரும் பாவி நிலவுமே

போதாதோ மன்மதா! மைக்கருங் கண்ணாள் இரதிக்கு

மால்கொண்ட மன்மதா - விடை வல்லார்க்கு மால் கொண்டாற்

பொல்லாப் பென் மேலுண்டோ மன்மதா! 1 திக்கெல்லாம் தென்றற் புலிவந்து பாயுதே மன்மதா - குயிற் சின்னம் பிடித்தபின்

அன்னம் பிடியாதே மன்மதா!