பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 59

23. ஈசரைப் புகழ்தல்

மானே! மன்னவராகிய குற்றாலநாதரின் செய்தியினை நீ இன்னமின்னம் கேட்கமாட்டாயோ. அவருடைய வாகன மாகிய பெரிய எருதுக்கு உலகம் முழுவதும் ஒரடி தான் என்பதை நீ அறிவாயாக அவர் சந்நிதியின் பயனால் பெற்ற பேறல்லவோ பொன்னுலகத்திலே தேவர்கள் எல்லோரும் பெற்றுள்ள செல்வமெலாம்! தினந்தோறும் சந்திரரும் சூரியரும் வந்திறங்கித் தரிசித்துச் செல்லும் வாசலன்றோ அவருடைய திருக்கோவிலின் வாசல்.

நன்னகரிலேயுள்ள ஈசரிடத்து நான் ஒருத்தி மட்டுந் தானோ ஆசை கொண்டேன் என்று நீ நினைத்தனை. பல கன்னியர்களும், முனிபத்தினிமார்களும்கூட அவர்மீது முன்னாளிலே ஆசை கொள்ளவில்லையோ? தென்னிலங் கையிலே வாழ்ந்த ஒப்பற்ற கன்னிகையாளான மண்டோதரி யாள், அவருடைய அழகிய திருவடியிலேசேர்ந்து அணை வதற்கு என்ன தவம் செய்தாளோ? அதனை நானும் செய்வதற்கு அறியேனே?

இராகம் - செளராஷ்டிரம் - தாளம் - ரூபகம் கண்ணிகள் மன்னவர்குற் றாலர் இன்னமின்னங்

கேளாயோ மானே! - அவர் வாகனத்தின் மால்விடைக்கு லோகம் ஒக்க

ஓரடி காண் மானே!

சன்னிதியின் பேறல்லவோ பொன்னுலகில்

தேவர் செல்வம் மானே! - தினஞ் சந்திரரும் சூரியரும் வந்திறங்கும்

வாசல் கண்டாய் மானே! 1 நன்னகரில் ஈசருக்கு நான்தானோ

ஆசைகொண்டேன் மானே! - பல கன்னியரும் ஆசைகொண்டார் பன்னியரும்

ஆசைகொண்டார் மானே!