பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

சன்னிதி விசேடஞ் சொல்லத்

தக்கதோ மிக்க தோகாய் என்னிலா னதுதான் சொன்னேன் இனிஉன திச்சை தானே.

(தோகாய் - மயில் போன்ற பெண்ணே. சொன்னவர் -

அவள் மயல் கொண்டது தவறு என்று சொன்னவர்)

28. தூது சொல்லி வாராய்!

நீ எனக்காக அவரிடம் போய்த் துது சொல்லி வருவாய் பெண்ணே குற்றாலநாதர் முன்பாகப் போய்த் தூது சொல்லி வருவாய்! முன்னாளிலே, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகத் துதுபோன அவர் முன்னே நீ போய், என் பொருட்டாகத் துது சொல்லி வருவாயடி பெண்ணே!

உறங்கலாமென்றாலோ உறக்கமும் வரவில்லை. மாயஞ் செய்த அவரை மறக்கலாமென்றாலோ, மறக்கவும் முடிய வில்லை. பெண் சென்மம் என்று பிறந்தாலும்கூட எனக்குப் பேராசை கூடாது என்பதை அறிந்திருந்தும், அந்தச் சலுகைக் காரரிடத்திலே, நான் ஆசையுடையவளாகி விட்டேன். அதனால் இப்போது நீ போய்த் தூது சொல்லி வருவாயாக

நேற்றைக்கெல்லாம் குளிர்ச்சியாகக் காட்டி, இன்று கொதிப்புடையதாக மாறிவிட்ட நித்திரையாகிய பாவிக்குத் தான் என்னுடன் என்ன போட்டியோ? நடுவே, இந்தத் தென்றற் காற்றுக்கும் அல்லவோ ஒரு கோட்டி வந்திருக்கிறது. ‘என் விரக நோய்க்கு மாற்று மருந்து முக்கண் மருந்தே என்று பொறுப்புக் கட்டி, அவரிடம் போய் நீ எனக்காகத் தூது உரைத்து வாராயோ?

'வருவதென்றால், இந்த நேரத்திலேயே வரச்சொல்லு. அப்படி உடனே வராதிருந்தனரென்றால் அவருடைய மார்பிலே அணிந்துள்ள கொன்றைமாலையினை யாகிலும் தரச்சொல்லு, குற்றாலநாதர் எனக்கு எதனையாவது தருவ தாயிருந்தால் என்னிடமிருந்து பறித்துப் போன என் நெஞ்சைத் திருப்பித் தரச்சொல்லு. அப்படி அவர் தராதிருந் தால், தானும் ஒரு பெண்ணாகிய அவருடைய சக்தியை, நான்