பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 69

அப்பொழுது குற்றாலர் தேவியுடன் கொலுவிருப்பார்

ஆசைசொல்லக்கூடாது கண்டாய் சகியே!

முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் வந்துநின்று

முயற்சிசெயுந் திருவனந்தல் கூடிச் சகியே!

கொப்பழகு குழைமடந்தை பள்ளியறை தனிலிருந்து

கோயில்புகும் ஏகாந்த சமயம் சகியே 15 மைப்பழகு விழியாய்என் பெருமாலை நீ சொல்லி

மருமாலை வாங்கியே வாராய் சகியே! 16

(வியனாக - மிகுதியாக. பெத்தரிக்கம் - செருக்கு. ஆட்கொண்டார் குறடு - நந்திதேவர் பீடத்திற்கு அருகிலுள்ள குறடு வண்டுகளும் கிள்ளைகளும் மாதர்விட்ட தூதாக வந்தவை. பணிமாறு காலம் - ஒப்பனை அடிக்கடி மாறிக் கொண்டே போகும் அபிஷேக காலம். நாலுகவி - சந்தக் கவி முதலியன. மருமாலை - மணமாலை, மறுமாலை என்பதும் பாடம். தோழி தூதுரைக்கப் போகிறாள், வசந்தவல்லி தனியே இருந்து நோகின்றாள்.)

31. கடல் இழைத்தாள்!

தெளிந்த நீரையுடையது வடவருவி. அதனைத் தீர்த்தமாக உடையவர் திருக்குற்றாலர். அவருடைய சிவந்த சடையின் மேலாக விண்ணினின்றும் வீழ்ந்த நீராகிய கங்கையைச் சூடியும் இருப்பவர். அவர்பால் மையல் கொண்டதனால் வந்த விரகத்தின் வெம்மைக்கு ஆற்றாதவளாகக் கண்ணிரே நறும் புனலாக ஒழுகிக் கொண்டிருக்கவும் சுழன்று வீழும் கை வளையல்களே செய்ய கரையாக விளங்கவும் கொண்டு உள்ளேயிருக்கும் மோக வாதையினால் கூடலாகிய உறைக் கிணறு செய்பவளானாள் வசந்தவல்லி,

தெண்ணி வடவருவித் தீர்த்தத்தார் செஞ்சடைமேல் விண்ணி புனைந்தார் விரகவெம்மைக்கு ஆற்றாமல் கண்ணி நறும்புனலாக் கைவளையே செய்கரையா உண்ணிற் கூடல் உறைக்கிணறு செய்வாளே.

(இங்ங்னம், காதல் கொண்ட பெண்கள் கூடலிழைத்துப் பார்த்து, அது கூடினால் தம் எண்ணம் கைகூடுமெனவும், கூடாவிட்டால் தம் எண்ணங் கைகூடாதெனவும் அறியும்