பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

அஞ்சு சடைமுடி விஞ்சை அமலனை

நெஞ்சில் நினைவொடு மிஞ்சுகுறிசொல (வஞ்சி) 1. சொக்கட்டான் காய்களை ஒத்த முலைகளை யுடையளவள். இல்லையோ என்று சொல்லும்படியான நுண்மையான இடையினை உடையவள், வில்லைப் போன்ற நெற்றியினை உடையவள், முல்லை அரும்புகளையும் வெல்லும் பல்வரிசையினை உடையவள், பூங்கொடி என்று சொல்லத்தக்க ஒப்பற்ற கொல்லிமலைப் பாவையினும் சிறந்த மெல்லிய பூங்கொடி போன்றவள் இவள் என்று சொல்லு மளவுக்கு மிக்க அழகினையுடையவள்; வட தேசத்தேயுள்ள பெரிய தில்லி மாநகரம் வரையிலும் புகழ் பரவிய பிற்காலத்திலே நேர்ந்து வருகின்றவை பற்றிய குறிகளைச் சொல்லிய இனிய பேச்சினையுடைய நல்லவள். இமய மலையிலே பிறந்த பூங்கொடியான குழல்வாய்மொழிச் செல்வியானவள் சேர்ந்து இன்புறுகின்ற குற்றாலநாதருடைய கல்வி சிறந்த மலைக் குறவஞ்சியானவள் அங்கே வந்தனள்!

சரணங்கள் வல்லை நிகர்முலை இல்லை எனும் இடை

வில்லை அனநுதல் முல்லை பொருநகை வல்லி எனஒரு கொல்லி மலைதனில்

வல்லி அவளினும் மெல்லி இவள்ளன ஒல்லி வடகன டில்லி வரைபுகழ்

புல்லி வருகுறி சொல்லி மதுரித நல்லி பனிமலை வல்லி குழல்மொழிச்

செல்வி புணர்பவர் கல்வி மலைக்குற (வஞ்சி) (வல்லை - சொக்கட்டான் காய்கள். முல்லை - முல்லை யரும்புகள், மெல்லி - மென்மைத் தன்மையுடையவள், அழகி. கொல்லிமலைதனில் வல்லி - கொல்லிப்பாவை. ஒல்லி - அழகி. கல்வி மலை - தமிழ் வளர்த்த பொதியமாதலால் கல்விமலை என்றனர்.)

2. குன்றுகளிலே இடுகின்ற மழைக்காலத்து மின்னல்கள் என்னும்படியாக, நெருக்கமாகக் கோத்த குன்றிமணிமாலை