பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 79

அவள் கொங்கைகளிலே தங்கி அசைந்து கொண்டிருந்தது. மணங்கமழும் இளந்தென்றல் இழைந்து வரும் நாசிப் பாதையருகே நிலைபெற்ற முத்துப் புல்லாக்கு விளங்கிக் கொண்டிருந்தது. ஒன்றிலே இரதிதேவியும், மற்றொன்றிலே மன்மதனும் ஊசலாடிக் கொண்டிருப்பது போல இரு செவிகளின் கண் ஆடிக்கொண்டிருந்த குழைகள் விளங்கின. எந்தக் காலத்துக்கும் நிலைபெறுமாறு ஒப்பனையாக எழுதிய மைந்த சித்திர சபையிலே நடனமிடுகின்ற திருவடிகளை உடையவரான திருக்குற்றால நாதரின், வெற்றி கொண்ட மலையிலே வாழ்பவளான குறவஞ்சி அங்கே வந்தனள்!

குன்றில் இடுமழை மின்கள் எனநிரை

குன்றி வடமுலை தங்கவே மன்றல் கமழ்சிறு தென்றல் வரும்வழி

நின்று தரளம் இலங்கவே ஒன்றில் இரதியும் ஒன்றில் மதனனும் ஊசலிடு குழை பொங்கவே என்றும் எழுதிய மன்றில் நடமிடு

கின்ற சரணினர் வென்றி மலைக்குற (வஞ்சி) 3. அசைந்தாடிக் கொண்டிருக்கின்ற இரு குழை களாகிய தோடுகளையும், ஒப்பற்ற கூந்தலாகிய காட் டினையும், அவளுடைய இரு விழிகளும் சாடிக் கொண் டிருக்கும் குன்றுகளையும் தம் வடிவாற் பொருதும்படி அமைந்த முலைகளானவை, தம்மை மூடும் மேலாடையி னூடே வெளியே பிதுங்கி வர முயல்வனபோல மல்லாடிக் கொண்டிருந்தன. தோடி, முரளி, வராளி, பயிரவி போன்ற இராகங்களின் இனிமை தோன்றுமாறு இசைத்துப் பாடிக் கொண்டே, நெடிய மலையினிலேயுள்ள மயில்கள் ஆடு கின்றதுபோல ஆடியவளாக, திருக்குற்றாலமாகிய நிலவு கவிந்திருக்கும் மலையான திரிகூட மலையிலேயுள்ள குறவஞ்சியானவள் அங்கே வந்தனள்!

ஆடும் இருகுழை தோடும் ஒருகுழற் காடும் இணைவிழி சாடவே