பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருக்குற்றாலக் குறவஞ்சி- மூலமும் உரையும்

மாத்திரைக் கோலது துன்னச்

சாத்திரக் கண்பார்வை பன்னத் தோத்திர வடிவம் மின்னப்

பூத்தமலர்க்கொடி என்ன (வஞ்சி) (செல்ல - செல்வாக்குள்ள. துன்ன - நெருங்கிப் பொருந்த)

7. மலைவளம் கேட்டாள்! தேவலோகத்து வாத்தியங்கள் எப்போதும் முழங்கிக் கொண்டிருக்கின்ற நன்மை பொருந்திய நகரமான அவ்வூரிலே கோவில் கொண்டிருக்கின்ற திருக்குற்றாலநாதரின் அருளைப் பாடிக்கொண்டே வந்த குறவஞ்சியைக் கண்டு, வசந்த வல்லியானவள் மிகவும் மன மகிழ்ச்சி கொண்டாள். 'சாந்தம் பூசிய கொங்கைகளும், துவள்கின்ற இடையும், முத்துப் போன்ற பற்களும், பவளம் போன்ற இதழ்களும் உடைய வளாகிய குறப்பெண்ணே உன்னுடைய சொந்த மலை எந்த மலையோ? அந்த மலையின் வளத்தைப் பற்றி எனக்குச் சொல்வாயாக!' என்றாள்.

விருத்தம் அந்தரதுந் துபிமுழங்கு நன்னகர்க்குற்

றாலலிங்கர் அருளைப் பாடி வந்தகுற வஞ்சிதன்னை வசந்தவல்லி கண்டுமன மகிழ்ச்சி கொண்டு சந்தமுலை துவளும் இடைத் தவளநகைப்

பவளஇதழ் தையலேயுன் சொந்தமலை எந்தமலை அந்தமலை

வளமெனக்குச் சொல்லென் றாளே!

8. எங்கள் மலையே! ஆண் குரங்குகள் பலவகையான பழங்களையும் பறித்துக் கொண்டுவந்து கொடுத்துத் தம் மந்திகளோடு கொஞ்சிக் கொணடிருக்கும்; அப்போது அம்மந்திகள் கீழே சிந்துகின்ற கனிகளுக்காக எதிர்பார்த்துத் தேவர்களும் கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். கானவராகிய வேடுவர்கள், தம்