பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 83

கண்களால் உறுத்து நோக்கி அந்த வானவர்களைக் கீழே வருமாறு அழைத்துக் கொண்டிருப்பார்கள். வானிலே இயங்கும் சித்தர்கள் பலரும் அடிக்கடி வந்துவந்து காய சித்தி மூலிகைகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். தேனருவியானது அலைகள் மேலே எழும்பிச்சென்று வானின் வழியாக ஒழுகிக் கொண்டிருக்க, அதனால் செங்கதிரோனின் தேர்க் குதிரைகளின் கால்களும் தேர்ச்சக்கரங்களும் வழுக்கிவிழவும் நேரும். வளைந்த இளம்பிறையினைத் தம் சடையிலே முடிந்திருக்கும் அழகினை யுடையவரான குற்றாலநாதரின் அத்தகைய வளமுடைய திரிகூட மலைதான் எங்களுடைய மலையுமாகும். இராகம் - புன்னாகவராளி தாளம் - ஆதி கண்ணிகள் வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூணலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே. முழக்கமிடும் அலைகளையுடைய நீர்வீழ்ச்சியானது தானும் கழங்காடுவதுபோல முத்துகளைச் சொரிந்து கொண் டிருக்கும் கானவர் மனைகளின் முற்றங்களிலெல்லாம் பரவிப் பெண்களின் சிற்றில்களையும் அவ்வருவி நீரானது கொண்டு ஒடிக்கொண்டும் இருக்கும். மலைச்சாரல்களிலே கிழங்கு களைக் கிள்ளி எடுத்தும், தேன் இறால்களை எடுத்தும், மலைவளங்களைப் பாடியும் நாங்கள் நடனமாடுவோம். களிற்றியானைகளின் கொம்புகளை ஒடித்துக் கொணர்ந்து, பூண்கட்டி, அதனாலே வறுத்த தினையினை உர்லிலேயிட்டு இடிப்போம். குரங்குகள் இனிய மாமரத்தின் வளமான பழங்களைப் பறித்துப் பறித்துப் பந்தாடுவதுபோல எறிந்து