பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 85

ஈசர், கயிலாச மலையினைத் தமக்கு வாசமாகக் கொண்டவர்; அவர் நிலையாகத் தங்கியிருக்கும் திரிகூட மலைதான் எங்கள் மலையுமாகும்.

ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும்

அம்புலியைக் கவளமென்று தும்பிவழி மறிக்கும் வேடுவர்கள் தினைவிரைக்கச் சாடுபுனந் தோறும்

விந்தை அகில் குங்குமமுஞ் சந்தனமும் நாறும் காடுதொறும் ஓடிவரை ஆடுகுதி பாயும்

காகமணு காமலையில் மேகநிரை சாயும் நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்

நிலைதங்கும் திரிகூட மலைஎங்கள் மலையே. 12 கயிலைமலை என்று போற்றப்படுகின்ற வடதிசை யிலுள்ள மலைக்கு ஒப்பாகத் தென்திசையிலே விளங்கும் மலை இந்தத் திரிகூட மலையேயாகும். 'பொன்னிறமான மகா மேரு மலை போலும் என்று சொல்லும்படியாக உயர்ந்து நிற்கும் மலை, இந்த மலையேயாகும். சிவசயில மலை என்று கூறப்படும் தென்திசையிலேயுள்ள மலைக்கு வடதிசையிலே இருக்கும் மலை இந்த மலையேயாகும். சகல மலைகளும் கொண்டிருக்கும் சிறப்புகள் எல்லாவற்றையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் மலையும் இந்த மலையேயாகும். வயிரக் கற்களும் மாணிக்கங்களும் விளைகின்ற மலையும் இந்த மலையேயாகும். வானத்துக் கதிரவன் மலைக் குகைகள் தோறும் நுழைந்து நுழைந்து ஒளிபரப்பும் மலையும் இந்த மலையேயாகும். திருப்பாற்கடலிலே பாம்பணைமேல் துயில் கொண்டிருப்பவரான திருமாலும் கண் விழித்துக் கொண்டவராகி, அகிலமெல்லாம் தேடித் திரிகின்ற மேன்மையாளராகிய திருக்குற்றாலநாதரின், இந்தத் திரிகூட மலையே எங்கள் மலையுமாகும்.

கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே

கனகமகா மேருஎன நிற்குமலை அம்மே சயிலமலை தென்மலைக்கு வடக்குமலை அம்மே

சகலமலை யுந்தனக்குள் அடக்குமலை அம்மே