பக்கம்:திருக்கோலம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் ஆற்றலும் கருணையும் - 95

தேவர்களெல்லாம் கூடி ஆலோசனை செய்தார்கள். தட்சினமூர்த்தியை எழுப்புவதற்கு வழி என்ன என்று ஆராய்ந்தார்கள். யோகியாக இருக்கும் இறைவனைப் போகி ஆக்க வேண்டும். அம்பிகை இமாசல அரனுடைய மகளாக அவதாரம் செய்து இறைவனேயே நாயகனுகப் பெறவேண்டுமென்று தவம் செய்தாள். இருவருடைய த வ த் து க் கு ம் ஒரு முடிவு கட்டி, அம்மையையும் அப்பனையும் ஒன்றுபடச் செய்தால்தான் உலகம் உய்யும்; மக்களின் சந்ததி வளர்ச்சி அடையும். குமாரன் உதய மானுல் சூரன் கொடுமை மாயும்; குரனே அந்தக் குமாரன் அழித்துத் தேவர்கள் பழையபடி வாழும்வண்ணம் செய்வான். -

எப்படி இ ைறவனுடைய தவத்தைக் கலேப்பது என்பது தான் இப்போதுள்ள பெரிய கேள்வி. இந்திரன் முதலிய தேவர்களெல்லர்ம் என்ன என்னவோ சண்ணிப் பார்த் தார்கள். தவம் செய்பவர்களுடைய தவத்தைக் குலேக்க இந்திரன் தேவலோகத்து ஆரணங்குகளே அனுப்புவது வழக்கம். அப்படி அனுப்பிப் பலருடைய தவத்தைக் கலைத் திருக்கிருன் இறைவனிடம் யாரை அனுப்புவது? தெய்வப் பெண்களுக்குத் தகப்ப&னப் போன்றவன் சிவபிரான். அவர் களால் என்ன செய்யமுடியும்?

பெண்களால் மக்கள் உள்ளத்தில் ஆசை எழுகிறது. அந்த ஆசையை உண்டாக்குபவன் காமன். பெண்களைப் படைகளாகக் கொண்டு அவன் தன் போரை நடத்துகிருன். அவனேயே அனுப்பினுல் என்ன? அவன் தன் மலரம்புகளே இறைவன்மேல் விட்டால் அவை யோகத்துயிலினின்றும் இறைவனே எழுப்பிலுைம் எழுப்பலாம்.

கடைசியில் மன்மதனே அனுப்புவது என்று தீர்மானித் தார்கள். இந்த எண்ணத்தை மன்மதனிடம் சோன்ன போது அவன் முதலில் மறுத்தான்; என் அம்பில்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/105&oldid=578044" இலிருந்து மீள்விக்கப்பட்டது