பக்கம்:திருக்கோலம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரியம் அற்ற உறக்கம் 盈盈母

விரும்பியவற்றைக் கேட்கிறர். முதலாளியும் கொடுக்கிறர். முன்பே முதலாளியோடு பழகி அவரிடம் பணம் கொடுத் திருப்பதனால்தான், அந்த மனிதர் பயணம் புற்ப்படும்போது கேட்கிற பண்டங்களை முதலாளி தருகிருர், முன் பின் பழக்கம் இல்லாமல், பனமும் கொடுக்காமல் இருந்தால் உதவி செய்வாரா? ' ' .

வாழும்பொழுது அம்பிகையை நினைந்து பக்தி பண்ணி மூன்று கரணங்களாலும் அவளே வழிபட்டுவந்தால் அந்தப் புண்ணியம் மரணத்தறுவாயில் வந்து காப்பாற்றும். வாழ் நாள் எல்லாம் எது எதற்காகவோ முயற்சிசெய்து அலேந்து திரிந்துவிட்டுக் கடைசிக்காலத்தில் நன்மை வரவேண்டு மென்றல் வராது. இறக்கும்பொழுது இறைவியின் நினைவு உண்டாவது எளிய காரியம் அன்று. காலம் எல்லாம் அவளிடம் அன்பு செய்து, அவளுடைய சரணுரவிந்தமே உண்மையான பற்றுக்கோடு என்று எண்ணி, உபாசனை செய்யவேண்டும். அப்போதுதான் மரணசமயத்தில் அவள் . நினைவு உண்டாகும். நீ வந்து காப்பாற்றவேண்டும்’ என்று விண்ணப்பித்தால் அவள் உடனே எழுந்தருளி வந்து பாதுகாப்பைத் தருவாள்.

பயிரிடும் காலத்தில் செய்யவேண்டியதைச் செய்பவன், அறுவடைக்குமுன் சில காலம் சும்மா இருந்தாலும், பருவத் தில் அறுவடை செய்யப்போகுல் பலன் கிடைக்கும். வாழ் நாளில் அம்பிகையிடம் ஈடுபட்டுப் பழகினல் இறுதிக் காலத்தில் அதற்குப் பயன் உண்டாகும். . . . . . . . -

அபிராமிபட்டர் அம்பிகையை மூன்று கரணங்களா லும் வழிபட்டவர்; அவளே ஒரு கணமும் மறவாமல் வாழ்ந்தவர். அவர் அம்பிகையிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிருர், நான் மரணமடையும் சமயத்தில் வந்து என்னே ஆண்டருள வேண்டும்’ என்று வேண்டிக்கொள்

தி-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/123&oldid=578062" இலிருந்து மீள்விக்கப்பட்டது