பக்கம்:திருக்கோலம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 - திருக்கோலம்

துரியம்; அதற்கும் மேற்பட்ட இன்பநிலை துரியாதீதம். அந்த நிலை அம்பிகை நம் சென்னியில் திருவடி வைப்பதன் பயணுகக் கிடைக்கும். அதைத் தர நீ எழுந்தருள வேண்டும்’ என்கிருர் இந்தப் பக்தர்." -

துரியம் அற்ற உறக்கம் தர வந்து என்முன்னே வரல் வேண்டும். இவ்வாறு துரியம் கடந்த நிலேயை, துவாதசாந்தப் பெருவெளியில் துரியம் கடந்த பரநாத மூலத் தலத்து முகாத்தமுழு முதலே (மீட்ைசியம்மை பிள்ளைத் தமிழ், முத்தட்பருவம், 1) என்று மீட்ைசியம்மையைத் துதிக்கும் பொழுது எடுத்துச் சொல்கிருர், குமரகுருபர முனிவர். அந்த நிலை துவாதசாந்தப் பெருவெளியாம்; பரநர்த மூலத் தலமாம். அங்கே அம்பிகை பரிபூரண வஸ்துவாக விளங்கு கிருளாம். மற்றேர் இடத்தில், துரியங் கடந்த துவாத சாந்தப் பெருவெளிவளாகத் தொருபெருங் கோயில்?? (மதுரைக் கலம்பகம், 109) என்று சுட்டுவார். அங்கே உண்டாகும் அநுபவத்தைப் பெற்ற அநுபூதிமான்களை, *குரவர் இருவரும் உற்றிடு துவாதசாந்தத்து ஒரு பெரு வெளிக்கே விழித்துறங்கும் தொண்டர் (மீனுட்சியம்மை பிள்ளைத் தமிழ், அம்மான,3) என்று பாராட்டுவார். அங்கே காமேசுவரனும் காமேசுவரியும் இருப்பதைச் சொல்கிறர். அங்கே உண்டாகும் இன்ப நிலையை, விழித்துறங்கும் நிலை, என்கிருர். அதையே அபிராமியட்டர் துரியமற்ற- உறக்கம்’ என்கிருர், அத்தகைய உயர்ந்த இன்ப அநுபவ நிலை உண்டாகும்படி என் முன்னே வந்து காட்சி அளிக்க வேண்டும். அவ்வாறு வருவது எளிதன்று; முயற்சி செய்து வரவேண்டும் என்ருலும் எனக்காக, அந்த வருத்தத்தைப் பாராமல் வந்தருளவேண்டும் என்று சொல்கிருர்,

என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

அப்படிச் சொல்லும் உரிமையைப் பெற்றவர் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/128&oldid=578067" இலிருந்து மீள்விக்கப்பட்டது