பக்கம்:திருக்கோலம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைவிலா நிறைவு

அன்றன்று பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஏழைக்குச் சேர்ந்தாற்போல் ஒரு மாதத்து உணவுக்கு வேண்டிய அரிசி முதலிய பொருள்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆல்ை அந்த ஒரு மாதம் சுகமாக இருந்தவன் அடுத்த மாதம் பழையபடி பிச்சைக்குப் போகவேண்டியதுதான். மாதந் தோறும் ஒருவர் அவனுக்கு வேண்டியதைத் தருவதாக இருந்தால், அவனுக்கு வறுமை ஒழியும்; விடிவுகாலம் வரும். ஆஇல் அதிலும்ஒருசங்கடம் இருக்கிறது. அப்படி வழங்குகிற வள்ளல் எப்போதும் செல்வம் உடையவராக இருக்க வேண்டும், இடையில் நொடித்துப் போனல் என்ன செய்வது? ஒர் ஏழை மற்ருேர் ஏழையைக் காப்பாற்ற முடியுமா? - -

அப்படி அவர் ஏழையாகிவிடுவாரா?” எனக் கேட்க லாம். செல்வம் நிலையாது என்பது உலகறிந்த இரகசியம். எவ்வளவோ பெரிய மன்னர்களெல்லாம் இப்போது சாமானிய மனிதராகிவிட்டார்கள். பெரிய வள்ளலாகிய குமணனே அரசை இழந்து காட்டில் இருந்தபோது அவனே நாடி வந்த புலவரிடம், அந்த நாள் வந்திலே’ என வருந் தின்ை. ஆகவே, ஒரு செல்வரிடம் இருக்கும் செல்வம் எப்போதும் நிலையாக இருக்கும் என நம்பக்கூடாது. -

மற்றெரு சங்கடமும் இருக்கிறது. வழங்குகிற வள்ளல் மனிதப் பிறவி உடையவர்தாமே? அவர் இந்த ஏழை உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/131&oldid=578070" இலிருந்து மீள்விக்கப்பட்டது