பக்கம்:திருக்கோலம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருத நிலை - 1.37

அம்பிகை படிப்படியாக அவரை ஆட்கொண்டாள். அதைச் சொல்கிருர். அம்பிகை மூவருக்கும் மேலானவள் என்பதை உணர்ந்தார். அவளுடைய பெருமைகளை அடிக்கடி கேட்டார். அவளுடைய அடியார்களுடன் சேர்ந்து அவளிடம் அன்பு செய்யத் தொடங்கினர். அவருடைய பக்குவம் முதிர்ந்தது; அவருடைய தகுதி உயர்ந்தது. அப்போது அவர் உருகினர். அன்பு மலரும்போது உருகும் பக்குவம் வரும். காய் பழுத்தால் கனிவு உண்டாவதுபோல, அன்பு பழுத்தால் உருக்கம் ஏற்படும். பக்குவமான அன்புக்கு அடையாளம் உருகுதல். - -

'நினேந்துருகும் அடியாரை??

என்பது அப்பர் வாக்கு.

அப்படி உருகும்போது, அம்பிகையின் திருவடியை இறுகப் பற்றிக்கொள்ளும் பேறு கிடைக்கும். அரக்கில் முத்திரையைப் பதிக்கவேண்டுமானல் அப்படியே பதிக்க முற்பட்டால், அரக்குத் தூள்தூளாகிவிடும். அதை உருக்கி அதன்மேல் முத்திரையைப் பதித்தால் பதியும். அப்படி, மனம் நன்ருகப் பக்தியில்ை உருகும்போது அம்பிகையின் பாதம் அங்கே நன்ருகப் பதியும், மனம் பற்றிக்கொள்ள முடியும், அன்னே எல்லோருடைய உள்ளத்திலும் இருக் கிருள். அதல்ை யார் யார் என்ன என்ன எண்ணுகிருர் களோ அவை யாவும் அவளுக்குத் தெரியும், ஆனாலும் அவர் களுடைய மனம் அவள் பாதத்தைப் பற்றிக்கொள்ள முடிவதில்லே. அவள் திருவடி அங்கே பதிவதில்லை. பதிவதற். குரிய பதம் அல்லது பக்குவம் அங்கே இல்லை. அன்பர்களின் உள்ளத்தில் உருகும் பக்குவம் இருக்கிறது. அந்தப் பதம் உண்டாவதால் திருவடி பதிகிறது. மனம் பற்றிக் கொள்கிறது. அபிராமிபட்டர் இந்த அநுபவத்தைச் சொல்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/147&oldid=578086" இலிருந்து மீள்விக்கப்பட்டது