பக்கம்:திருக்கோலம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருத நிலே - 141.

முடியாது; மீளவும் மாட்டார்; அம்பிகை மீளவும் விட மாட்டாள். மீளாமல் இருப்பதுவே இன்பம். பதத்தே உருகிநின் பாதத்தி லேமனம் பற்றிஉன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண்

டாய்! இனி யான் ஒருவர் மதத்தே மதிமயங் கேன்; அவர் போன வழியும்செல்லேன்; முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே! (முதல் தேவர்களாகிய மும்மூர்த்திகளும் மற்றவர். யாவரும் வணங்கித் துதிக்கும், அரும்பிய புன்னகையை யுடைய அபிராமி அன்னேயே, நல்ல பக்குவம் பெற்று அந்தப் பக்குவத்தில் என் உள்ளம் உருகி நின் திருவடியில் பற்றுக் கொண்டு நின் திருவுள்ளத்துக்கு உவப்பான நெறியிலே ஒழுகும்படி அடியேன ஆட்கொண்டாய்; ஆதலின் அடியேன் இனிமேல் வேறு ஒருவர் சமயக் கொள்கையைப் பெரிது என்று எண்ணி அறிவு கலங்கமாட்டேன்; அந்தச் சமயத்தினர் ஒழுகும் வழியிலும் போகமாட்டேன்.

பதம்-பக்குவம். இதம்-ஹிதம்; அன்னேயின் திரு வுள்ளத்துக்கு உகப்பானது. ‘இனி எண்ணுதற்குச் சமயங் களும் இல்லை’ (3) என்று இவ்வாசிரியர் முன்பு கூறியுள் ளார். மும்மூர்த்திகளும் அம்பிகையைப் போற்றுவதை, *கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கிஎன்றும், துதியுறு சேவடியாய்” (7) என்று முன்பும் சொன்னர். ப்ரம்ஹோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துதவைபவா (83)என்பதுலலிதா சகசிரநாமம். முகிழ் நகை: அன்மொழித் தொகை; முகிழ்க்கும் நகையை உடையவள் என்றும், முகிழ் போன்ற நகையை உடையவள் என்றும் இருவகையாகவும் பொருள் கொள்ளலாம்.)

அநந்ய பக்தியே சிறந்தது என்பது கருத்து. இது அபிராமி அந்தாதியில் 92-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/151&oldid=578090" இலிருந்து மீள்விக்கப்பட்டது