பக்கம்:திருக்கோலம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 X- திருக்கோலம்

பித்தர் ஆகிவிடுவார்கள். இத்தகைய பித்துப் பிடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அபிராமியை வழிபடும் சமயம் இத்தகைய பித்தை உண்டாக்கும். ஆனந்த அநுபவம், சொன்ன சொல் எல்லாம் பலித்தல் என்ற சிறப்புக் கிடைக்குமானுல் அதைவிட நன்மை வேறு என்ன இருக்கிறது? அத்தகைய பித்தைத் தரும் அபிராமி சமயம் நன்று என்று சொல்வதற்குத் தடையும் உண்டோ? ஆகையால் அபிராமிபட்டர் செல்கிருர்:

முன் சொன்ன எல்லாம் தரும்பித்தர்

ஆவர் என்ருல் அபிராமி சமயம் நன்றே! எல்லாம் மறந்து நிற்கும் நிலையில் இன்பம் உண்டாகும். அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் நழுவிய நிலையைத் திரிபுடிரகிதம் என்பார்கள். அதுதான் லோத் மறந்த ஆனந்த நிலை. அது வேறு எதலுைம் கிடைக்காது. அம் பி ைக ன் உபாசனையினுலேதான் சி-ைக்கும். அது மட்டு மன்று. அதற்கு மேலும் ஒன்று கிடைக்கும். அந்த நிலையை அடைந்தவர்கள் திருவாக்கில் வருவன வெல்லாம் நடக்கும். அத்தகையவர்களேச் சந்திய சங்கல்பர்கள் என்று சொல்வார்கள். மெய்ஞ்ஞானிகள் மறந்து ஒன்றைச் சொல்லிவிட்டாலும் அது பலித்து விடுமாம்.

விரும்பித் தொழும்.அடியார்விழி நீர்மல்கி, மெய்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆதி அறிவுஇழந்து. சுரும்பிற் களித்து, மொழிதடு

மாறிமுன் சொன்ன்ன்ல்லாம் தரும்பித்தர் ஆவர்என் ருல்அபி

ராமி சமயம்நன்றே! 3. . . . (கன்னிடம் அன்பு செய்து விரும்பி வழிபடும் அடிய வர்கள் கண்களில் நீர்மல்க, உடம்பெல்லாம் மயிர்க்கூச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/164&oldid=578103" இலிருந்து மீள்விக்கப்பட்டது