பக்கம்:திருக்கோலம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈58 திருக்கோலம்

நமக்கு உடல், பொருள், ஆவி என்ற மூன்றும் உடை மைப் பொருள். இந்த மூன்றையும் விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிருேம். இவற்றல் வரும் இன்ப துன்பங்களே அநுபவிக்கிருேம். இன்பம் மட்டும் இருந்தால் குற்றம் இல்லை; துன்பமும் கூட வருகிறதே! உண்மையில் துன்பந்தானே அதிகமாக இருக்கிறது? இந்தத் துன்பத்தை நீக்க என்ன வழி? உடலே விட்டுவிடுவதா? உயிரைத் தியாகம் செய்வதா?

அநாதைக் குழந்தை ஒன்று தாய் தந்தையரால் கைவிடப்பட்டு நடுத்தெருவிலே நிற்கிறது. அதற்குப் பசி வருகிறது. உணவு கொடுப்பார் இல்லே. அதல்ை அழு கிறது. அப்போது தயை மிகுந்த ஒருவர் அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்கத் தொடங்குகிருர். இப்போது குழந்தைக்கு என்ன என்ன வேண்டுமோ அவை யாவும் கிடைக்கின்றன. உணவு வேண்டுமே, உடை வேண்டுமே என்ற கவலேயே அதற்கு இல்லே. அவ்வாறு நாமும் குழந்தை ஆகிவிட வேண்டும்.

குழந்தைக்குச் சொத்துச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தன்னிடம் உள்ள ஆடை ஆபரணங் களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கவலே கிடை யாது. அதைப்பற்றிய எல்லாப் பொறுப்பையும் அதன் தாயே மேற்கொள்ளுகிருள். அது விளையாட்டுப் புத்தியில் சாப்பாட்டை மறந்திருந்தாலும் அவள் உரிய நேரத்தில் சோறு ஊட்டுகிருள். வீட்டில் அரிசி இல்லை. நாளேக்கு நாம் எப்படிச் சாப்பிடப் போகிருேம்? என்று அந்தக் குழந்தை கவகல அடைகிறதா? உடை அழுக்காகி விட்டது. அது பற்றி அந்தக் குழந்தை கவலே அடைகிறதில்லை. அதற்காக எல்லாக் கவலைகளையும் அதன் தாய் படுகிருள்.

நாம் குழந்தையாகி விடுவது எப்படி? நம்முடைய தாயைப் பற்றிக் கொண்டு எல்லாப் பொறுப்பையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/168&oldid=578107" இலிருந்து மீள்விக்கப்பட்டது