பக்கம்:திருக்கோலம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏது கவலை? 159

அவளிடம் ஒப்பித்து விட்டு, என்ன செய்வோம் என்று கவலைப்படாமல் இருக்கவேண்டும். அதுதான் குழந்தைத் தன்மை. நாளேக்கு என்ன செய்வது என்றே, நேற்று இப்படிக் கஷ்டப்பட்டோமே என்றே குழந்தை கவலை உறுவ தில்லை. அதைப் போல நாம் இருக்கவேண்டும். தாயின் பொறுப்பில் வளரும் குழந்தைக்கு இந்தக் கவலைகளே இல்லே. நாமும் ஒரு நல்ல தாயின் பொறுப்பில் வளரத் தொடங்கி விட்டால் கவலேகளே நம்மை அண்ட்ா,

குழந்தை என்ருல் தாய் இருக்கவேண்டும் சேயும் தாயும் ஒருவகை இணைப்பு. நாம் ஆண்டு முதிர்ந்து, இந்த உடம்பைத் தந்த தாயை இழந்திருப்போம். நமக்கே குழந்தைகள் இருப்பார்கள். இந்த திலையில் நாம் தாய்க்கு எங்கே போவது? நாம் எப்படிக் குழந்தையாவது?

இந்த உடம்புக்குத் தாயாக இருந்தவள் இறந்து போயிருக்கலாம். ஆளுல் நம்முடைய உயிருக்குத் தாயாக ஒருத்தி இருக்கிருள். அவள் என்றும் அழியாதவள். அவளுடைய தாய்த் தன்மையாகிய கருணை என்றும் அழி யாதது, அவரே ப் பற்றிக்கொண்டு நம்முடைய பொறுப்புக் களையெல்லாம், உடல் பொருள் ஆவி யாவற்றையும், அவளிட்ம் சமர்ப்பித்து, நாம் குழந்தையாகி விட்டால் அப்போது நமக்குக் கவலேயே இல்லாமல் போய்விடும்,

ஆற்றைக் கடக்கிறவன் அதில் நடந்து செல்ல நினைத் தால் எத்தனே ஆழம் இருக்கிறது என்று ஆராயவேண்டும். தன் உயரத்துக்கு மேலே இருந்தால் அங்கெல்லாம் நீந்த வேண்டுமென்றும், குறைவாக இருந்தால் நடந்தே போகலா மென்றும் தீர்மானம் செய்யலாம், ஆல்ை ஒரு தோணி கிடைத்துவிட்டால் ஆறு எவ்வளவு ஆழமாக இருந்தால் தான் என்ன? அவன் நடக்கவேண்டியதும் இல்லை; நீந்த வேண்டியதும் இல்லை. சுகமாகத் தோணியில் உட்கார்ந்து கொண்ட்ால் போதும். z "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/169&oldid=578108" இலிருந்து மீள்விக்கப்பட்டது