பக்கம்:திருக்கோலம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் அடியார்கள்

பொதுவாக அம்பிகையை வணங்குபவர்கள் பெரிய பதவியை அடைவார்கள் என்று சொன்ன அபிராமியட்டர் அப்பெருமாட்டியை உபாசனை செய்து நலம் பெற்றவர்களே நினைத்துப் பார்க்கிருர், எத்தனையோ காலமாக அன்னேயை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் கணக்கில் அடங்காத வர்கள். திரிமூர்த்திகளும் அவளுடைய அடியார் குழுவைச் சேர்ந்தவர்கள். இந் தி ர தி தேவர்கள் அன்னேயை வழிபட்டு நலம் பெற்றவர்கள். மனு முதலிய பேரரசர்கள் அவளுடைய வழிபாட்டைச் செய்து பயன்பெற்றவர்கள், அகத்தியர் மு. த லிய மு னி புங் க வர் க ள் அந்தப் பெருமாட்டியை வணங்கி அருள் பெற்றவர்கள்.

அன்னேயின் மந்திரத்துக்கு நீ வித்யை என்று பெயர். அதைக் கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தியவர்கள் பன்னிரண்டு பேர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக அந்த மந்திரத்தை வெளியிட்டார் கள். அப்படிப் பன்னிரண்டு பிரஸ்தாரங்கள் அமைந்தன. அந்தப் பன்னிருவரை,

மனு: சந்த்ரக் குபேரச்சலோபாமுத்ராச்ச மன்மத: அகஸ்திரக்னி:ஸ்வர்யச்ச இந்த்ர:ஸ்கந்த சிவஸ்ததா க்ரோதபட்டாரகோ தேவ்யா த்வாதசாமி உபாஸ்கா:

என்ற சுலோகம் இனம் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/181&oldid=578120" இலிருந்து மீள்விக்கப்பட்டது