பக்கம்:திருக்கோலம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - திருக்கோலம்

யார் என்றும், திருக்கோவையார் என்றும் பெயர்கள் வழங்கும்,

இவ்வாறு இலக்கணங்களாலும் இலக்கியங்களாலும் உணரப்படும் காதல் வாழ்க்கையில், திருமணம் செய்து கொண்டு வாழும் கற்புக்காலத்தில் காதலர்கள் கூடுதலும், பிரிதலும், ஊடுதலும் இருக்கும். கூடுவதும் பிரிவதும் களவு கற்பு என்ற இரண்டு வகை வாழ்க்கைகளிலும் இருப் பினும், ஊடல் என்பது கற்புக்காலத்தில் மட்டுந்தான் நிகழும்; கணவனும் மனேவியுமாக வாழும் காலத்தில் கணவ னுடைய செயலில் ஐயமுற்று மனேவி சினந்து அவனுடன் பேசாமல் இருப்பாள்; இதுதான் ஊடல்.

ஊடுதல் காமத்துக் கின்பம்; அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்?

என்று இந்த ஊடலைத் திருவள்ளுவர் சிறப்பித்துப்பேசுவார். ஊடுவதால் இன்பம் மிகுதியாகிறதாம்; பட்டினி கிடந்த பிறகு உண்பதில் சுவை கூடிவருவதுபோல, ஊடிப் பிறகு கூடுவதில் இன்பம் மிகுதியாக இருக்கும்.

மனைவி ஊடுவதும், கணவன் அவள் ஊடலைத் தணிப் பதற்குப் பலவகையாக நயந்து பேசுவதும், பணிவிட்ை செய்வதும் வழக்கம். அறையினுள் நிகழும் ஊடலால் விளேயும் விளைவுகளும் அதனைத் தணிப்பதற்குக் கணவன் செய்யும் செயல்களும் எல்லேயை மிஞ்சிப் போவதும் உண்டு. காவியங்களில் அத்தகைய காட்சிகளைக் காணலாம்.

சிவபெருமானும் அம்பிகையும். தெய்வத் தம்பதிகள். அவர்கள் கணவனும் மனைவியுமாக இருந்து, உலகத்தார் எவ்வாறு கணவனும் மனைவியுமாக இணைந்து வாழ. வேண்டும் என்பதைக் காட்டுகிருர்கள், х

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/188&oldid=578127" இலிருந்து மீள்விக்கப்பட்டது