பக்கம்:திருக்கோலம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்தது எங்கே? Ꭵ ? 9

'தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்

பெண்பால் உகந்தான், பெரும்பித்தன் காணேடி!

பெண்பால்உகந்திலனேல், பேதாய், இருநிலத்தோர்

விண்பாலியோகெய்தி விடுவர்காண் சாழலோ??

என்ற திருவாசகப் பாட்டு இந்தக் கருத்தைக் குறிப்பிக் கிறது.

கற்பு வாழ்க்கை முறைகளை யெல்லாம் இந்தத் திவ்ய தம்பதிகள் நடத்திக் காட்டுகிருர்கள், இறைவன் தந்த நெல்லேக் கொண்டு அம்பிகை அறம் வளர்க்கிருள். கற் பொழுக்கத்திற்குச் சிறப்பாக இருக்கும் ஊடலையும் அம்பிகை மேற்கொள் கிருள். அவளுடைய திருவிளையாடல் களில் அதுவும் ஒன்று. -

அன்னே சிவபெருமானுடன் ஊடும் காட்சிகளைப் புலவர்கள் வருணித்திருக்கிரு.ர்கள். வடமொழி தென் மொழி நூல்களில் அந்தக் காட்சிக&ரக் காணலாம். அம்பிகையின் ஊட&லத் தணிப்பதற்காக இறைவன் பல உபசாரங்களைச் செய்வதும், க ைட சி யி ல் அவளே வணங்குவதுமாகிய நிகழ்ச்சிகளேயும் அத்தகைய இடங்களில் காணலாம்,

அபிராமிபட்ட ர், அபிராமியம்மையின் ஊடலேத் தணிக்க எம்பெருமான் அவளேப் பணிவதாகப் பல இடங் களில் சொல்லியிருக்கிருர், அறையில் நிகழும் இரகசியச் செயலாலுைம் அந்தரங்கம் அறிந்த குழந்தைக்கு அது தெரி கிறது. அன்னேயின் குழந்தைதானே அபிராமிபட்டர்?

அபிராமியம்மையின், மறை நான்கினுக்கும் அந்த மான சரணுரவிந்தம், எம்பிரானுடைய திருமுடியின்மேல் கண்ணிபோல விளங்கு கிற து’ என்று ஓரிடத்தில் சொன்னர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/189&oldid=578128" இலிருந்து மீள்விக்கப்பட்டது