பக்கம்:திருக்கோலம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருக்கோலம்

'மறை நான்கினுக்கும். தான்.அந்தம் ஆன சரணுர

விந்தம் தவளநிறக் கானம்தம் ஆடரங் காம்எம்பி

ரான் முடிக் கண்ணியதே' (11)

இது குறிப்பாக இறைவன் அம்பிகையின் அடியை வணங்குவதைத் தெரிவிக்கிறது, . -

வேறு ஒரு பாட்டில், இறைவனுடைய திருமுடியின் மேலுள்ள பிறையின் மணம் அம்பிகையின் திருவடியில் மனக்கிறது" என்கிரு.ர். .

"திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி ? (85) இதுவும் அம்பிகையின் திருவடி தன் தலைமேல் பதியும். படி இறைவன் அவளே வணங்குவதைக் குறிப்பாகப் புலப் படுத்துகிறது.

வேறு ஒரு பாட்டில், நின் மலர்ப் பாதத்தை என் தலைமேல் வைத்து ஆண்டு கொண்டாயே; அந்தப் பாதம் சிவபெருமானுடைய கொன்றைவார் சடையின்மேலே இருப்பதாயிற்றே! அதைவிட என் கலே நல்லதா? என்று கேட்கிருர். - .

- பனிமாமலர்ப்பாதம்வைக்க . . . .

மாலினும் தேவர் வனங்கநின் ருேன்கொன்றை வார்சடையின்

மேலினும்...சாலநன்ருே அடியேன்முடை நாய்த்தலையே?? (60). இங்கும் இறைவன் அம்பிகையைப் பணிதலைக் குறிப் பாகச் சொன்னர். . . . .

இவற்றிற்கெல்லாம் மேலாக, தெளிவாகவே இறைவன் அம்பிகையின் ஊடலைத் தணிப்பதற்கு வணங்கும் செய்தியைப் ஒரு பாட்டில் சொல்கிருர். அதை இப்போது பார்ப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/190&oldid=578129" இலிருந்து மீள்விக்கப்பட்டது