பக்கம்:திருக்கோலம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரந்தது எங்கே? f81

அம்பிகையின் பெருமையைச் சொல்லி அவளை விளிக் கிருர். அன்ன சத்தியம் பேசும் நல்லவர்கள் நெஞ்சில் தித்தியவாசம் செய்வாள். உண்மையை உணர்ந்துகொண்ட மெய்ஞ்ஞானிகளின் உள்ளத்தே உறைவாள். எது உண்மை யானது, எது பொய்யானது என்று உணர்வதே மெய்யறிவு. அவ்வாறு அறியாதது அறியாமை, மருள். அதல்ை மேலும் மேலும் பிறப்பு வளர்கிறது.

பொருள்அல்லவற்றைப் பொருள் என்று உணரும்

மருளான்.ஆம் மானப் பிறப்பு?? என்பது திருக்குறள்,

அம்பிகை மெய்யையே எண்ணும் அன்பர்களின் நெஞ்சில் புகுந்து நிற்பாள். அவ்வாறின்றி வஞ்சகமும் பொய்ம்மையும் நிறைந்தவர்களின் நெஞ்சில் புகமாட்டாள்.

அவள் இளமையை உடையவள்: பூங்குயில் போல் இனிமையான குரலே உடையவள். முள்ளுச் செடிகளிலும் பயனற்ற மரங்களிலும் குயில் சென்று தங்காது. மலரையும் கனிகளையும் உடைய மாமரங்களிலும் அவைபோன்ற பிற மரங்களிலும் தங்கும். அதுபோல மெய்மணக்கும் நெஞ்சில் தங்குபவள் அம்பிகை. அன்பர்கள் நெஞ்சில் இனிய ஓசை புலப்படும்படி உறைவாள். அம்பிகையை மனம் ஒருங்கித் தியானம் செய்பவர்களுக்கு இன்னெலிகள் கேட்கும். இவற்றையெல்லாம் எண்ணி அபிராமிபட்டர் அம்பிகையை விளிக்கிருர். -

மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும்

விரகர்தங்கள் பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா

மடப் பூங்குயிலே, . இனி, இறைவன் அம்பிகையின் ஊடலை நீக்கும் பொருட்டுச் செய்யும் செயல்களே நினைக்கிறர். அம்பிகை யினிடமே ஒரு வினுவைச் சமர்ப்பிக்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/191&oldid=578130" இலிருந்து மீள்விக்கப்பட்டது