பக்கம்:திருக்கோலம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு நிலை 189

இசங்கதிர்’ (1) என்று இவ்வாசிரியர் இந்த நூலத் தொடங்கினர் அல்லவா? ஆகவே பூபுேரத்தில் எழுந்தருளி யிருக்கும் அம்பிகை, தேவரும் முனிவரும் காண இமாசல. புத்திரியாக இறங்கி வந்தவள், யாவரும் காண வானத்தில் கதிரவகைச் சுடர்விடுகிருள்.

வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்.

இனி, அடுத்து மிகவும் நெருக்கமாக வந்து அருள் செய்யும் நிலையைச் சொல்ல வருகிருர், உபாசகர்களுடைய இதய கமலத்தில் அவள் எழுந்தருளி இன்பம் தருவாள். யோகிகளுக்குச் சகசிரார கமலத்தில் வீற்றிருந்து காட்சி யளிப்பாள். ஆறு ஆதாரங்களும் கடந்த நிலையில் இருப்பது சகசிரார கமலம். ஒவ்வோர் ஆதார கமலத்திலும் அவள் வெவ்வேறு வடிவங்களோடு விளங்குவதைப் பற்றிப் பல சமயங்களில் பார்த்தோம், அந்தக் கமலங்களில் அம்பிகை அன்னம்போல எழுந்தருளியிருப்பாள். அன்னம் ஹம்ஸ் மந்திர சொரூபம்; தன்மையையும் தீமையையும் பிரித்தறி யும் பறவை; தூய வெண்ணிற வடிவமுடையது. மிக உயர்ந்த இமாசலத்து மானஸ் வாவியில் நீந்துவது; தரை, நீர், வானம் என்ற மூன்றிடங்களிலும் சஞ்சரிப்பது. அம்பிகையும் நன்மை தீமையை வேறு பிரித்தறிந்து நலம் செய்பவள்; சுத்த சத்துவகுண்த்தினருக்குப் புலப்படுபவள்; மிக உயரமான நிலையில் இருப்பவள்; கருணேயினல் அந்தர் மத்திய பாதலமென்னும் மூன்றிடங்களிலும் சஞ்சரிப் பவள்; ஆதலின் அவளைக் கமலத்து அன்னம் என்று சொல்லலாம். .

கமலத்தின்மீது அன்னமாம், தேவி சம்பந்தமான ஆகமங்களை அறிந்தவர்களுக்கு

அவள் திரிபுரசுந்தரியாக நிபுரத்தில் இருப்பவன் என்ற செய்தி தெரியவரும். புராணங்களைப் படித்தவர்களுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/199&oldid=578138" இலிருந்து மீள்விக்கப்பட்டது