பக்கம்:திருக்கோலம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகக் காட்சி 199

விழையப் பொருதிறல் வேரியம்

பாணமும் வெண்ணகையும்

உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்.எப்

போதும் உதிக்கின்றவே.

(குழையும்படியாகத் தன்னத் தழுவிய சிவபெரு மானுடைய மார்பில் அணிந்த அழகிய கொன்றைமாலேயின் மணம் கமழ்கின்ற தனபாரங்களையுடைய கொடி போன்ற அபிராமியம்மையினுடைய, மூங்கிலப் பொருது வென்ற அழகையுடைய நீண்ட தோள்களும், கரும்பாகிய வில்லும், ஆண்களையும் பெண்களேயும் ஒருவரை ஒருவர் விரும்பும்படி மோதுகின்ற தேனையுடைய அழகிய மலரம்புகளும், வெண்மையான புன்னகையும், மான் கண்ணே ஒத்த கண்களும் என்னுடைய உள்ளத்தில் எந்த நேரத்திலும் தோன்றியருளுகின்றன.

குழைய-சிவபெருமான் குழைய, அம்மை குழைய,

மாலே குழைய. தார் கமழ்.மாலேயின் மணம் கமழ்கின்ற; தார்: ஆகுபெயர். தார்.மார்பில் அணியும் மாலை. பெரும்பாலும் ஆண்கள் அணியும் மாலேயைத் தார் என்றும், மகளிர் அணியும் மாலையைக் கோதை என்றும் கூறுவது மரபு. கழை-கரும்பு என்றும் சொல்லலாம். பொருமோதும். வேரி-தேன்; இந்த அடையால் பாணம் மல. என்பது குறிப்பால் புலப்பட்டது. வெண்ணகை-வெண்மை யாகிய பல்வரிசை என்றும் பொருள் கொள்ளலாம். உழை-மான்; இங்கே மான் கண்; ஆகு பெயர். பொருஒத்த உவம உருபு.)

முறுகிய அன்புடையவர்க்ளுக்கு அம்பிகைஉண்முகத்தே தரிசனம் தருவாள் என்பது கருத்து.

அபிராமி அந்தாதியில் 100-ஆம் பாட்டு இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/209&oldid=578148" இலிருந்து மீள்விக்கப்பட்டது