பக்கம்:திருக்கோலம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் . 203

தொழுவதல்ை எத்தனையோ நலங்கள் உண்டாகும். இப்போது உள்ள தீமைகள் நீங்கும். பழி வந்ததே என்ற அச்சத்தால் நான் பாடத் தொடங்கினேன். பழி அற்புதமாக நீங்கிவிட்டது. அன்னையை மனத்தால் நினைந்து வாக்கினல் பாடினேன்; தொழுதேன். அதனல் எனக்கு வந்த தீங்கு நீங்கிவிட்டது. இந்த அநுபவத்தையே பயன கச் சொன்னல் என்ன என்று தோன்றுகிறது.?

எேனக்கு வந்த தீங்கு நீங்கி తయLE என்பதிலும் நான் என்ற உணர்வு தோன்றவில்&யா?? . . .

ஆமாம்! அது உண்மைதான். நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. நான் என்ன, வெறும் புழு மாத்திரம்! அன்னேயை யார் தொழுதாலும் தீங்கு அவரை அணுகாது. என்னுடைய அநுபவத்தால் இதை உணர்ந் தாலும் நான் தீங்கில்லாமல் இருக்கிறேன் என்று என்னச் சார்த்திச் சொல்லப் போவதில்லை. பொதுவாக யார் என் அன்னையைத் தொழுதாலும் அவருக்கு ஒரு திங்கும் வராது என்று சொல்லப் போகிறேன்.”

இவ்வாறு அகந்தை யொழிந்த அபிராமிபட்டர் பணி வுடன் நூற்பயனைச் சொல்லத் தொடங்கினர். அதுவும் அபிராமியன்னேயின் தோத்திரமாகவே அமைந்துவிட்டது. இன்னது கிடைக்கும் என்று கூடச் சொல்லவில்லை? எந்தத் திங்கும் வராது’ என்று முடிக்கிருர்.

இனி அந்தப் பாட்டைப் பார்ப்போம்.

அபிராமியம்மையைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லே’ என்று சொல்கிருர். தொழுவதையோ, தீங்கையோ விரித்துரைக்கவில்லை. அன்னேயை நினைக்கும் பொழுதே அவளைப் பற்றியே திருப்பித் திருப்பிச் சொல்லத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/213&oldid=578152" இலிருந்து மீள்விக்கப்பட்டது