பக்கம்:திருக்கோலம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 . திருக்கோலம்

செங்கதிர்?’ என்று எடுத்துரைத்து நூலைத் தொடங்கினர்? அங்கே, மாதுளம்பூ” என்று அந்த வண்ணத்துக்கு உவமை சொன்னர். அதை இந்தப் பாட்டிலும் சொல்கிரு.ர்.

மாதுளம்பூ நிறத்தாளே. தோடிமீ குளமப்ரபா என்று லலிதா சகசிரநாமமும் இந்த உ. வ ைம யி ைல் அம்பிகையின் வண்ணத்தை நினேக்கிறது. - -

உலகங்களேயெல்லாம் தோற்றுவித்த பெருமாட்டி அவற்றைத் தானே கருணே யுடன் காப்பாற்றுகிருள்; எப்படி யெல்லாம் காப்பாற்ற வேண்டுமோ, அப்படிக் காப்பாற்று கிருள்; தக்க அதிகாரிகளே வைத்துப் பாதுகாப்பளிக்கச் செய்கிருள். i

புவி அடங்கக் காத்தாளே.

முன்பும். 'பூத்தவளே புவனம் பதின்ைகையும் பூந்த வண்ணம் காத்தவளே’ (18) என்று இவ்வாசிரியர் சொல்லி யிருக்கிருர். உலகத்தைப் படைக்கும் பிரம்மாவைப் அதிஷ் டித்து நின்று சிருஷ்டித் தொழிலேயும், திருமாலே அதிஷ்டித்து நின்று காத்தல் தொழிலேயும் இயற்றுகிறவள் அம்பிகை, படைக்கும் தொழிலே உடைமையால், ஸ்ருஷ்டிகர்த்ரி, ப்ரஹ்ம ரூபா என்ற திருநாமங்களும் (264,260), காக்கும் தொழிலே உடைமையால், கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி (266, 267) என்ற திருநாமங்களும் அன்னக்கு உரியன வாயின. . - :

இவ்வாறு சொன்னவர், மேலே அம்பிகையின் திருக்கரங் களைச் சொல்கிருர், அம்பிகை கீழ்த்திருக் கரங்களில் பாசத் தையும் அங்குசத்தையும், மேல் திருக்கரங்களில் கரும்பு வில்லையும் மலர்ப்பாணங்களையும் ஏந்தியிருக்கிருள். இந்த நான்கையும் ஏந்தி வீற்றிருக்கும் வடிவம் இராஜராஜேசு வரியின் திருவுருவம். இரண்டாவது பாட்டில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/218&oldid=578157" இலிருந்து மீள்விக்கப்பட்டது