பக்கம்:திருக்கோலம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன் 209

எபனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி? என்று நான்கு கரங்களேயும் சொன்னர்.

5ே-ஆவது பாட்டிலும்.

'பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும்

பனிச்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்’ என்று சொன்னர். வேறு பல இடங்களில் கரும்பு வில்லை யும் மலரம்புகளையும் மாத்திரம் சொல்லியிருக்கிருர், நூலுக்குள் இரண்டே இடங்களில் அம்பிகையின் நான்கு கைகளிலும் உள்ள பொருள்களேச் சொல்லியுள்ளார். இப்போது பயனைச் சொல்லும் பாட்டிலும் அந்தச் சதுர் புஜங்களே நினைக்கிரு.ர்.

அங்குச பாசம் குசுமம் கரும்பும் அங்கை

சேர்த்தாளே. அபிராமி அந்தாதியைப் பல காலமாகப் பாராயணம் செய்து வந்தவர்கள், 'அங்குச பாசாங்குசமும் கரும்பு மங்கை சேர்த்தாளே?’ என்று சொல்லிவந்தார்கள், அதில் அங்குசம் இரண்டு முறை வருகிறது. மலரம்புகள் இல்லை. அந்தப் பாடம் எப்படி வந்தது? - ஒஇலச் சுவடிகளை ஆராய்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு, "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்பதற்கு எற்பப் பிரதி பண்ணுகிறவர்கள் எவ்வாறு பிழை செய்கிருர்கள் என்பது தெரியவரும். குசுமம் என்பது மலரைக் குறிப்பது, அருகி வழங்கும் சொல் அது. பாசாங்குசம் என்ற தொடர் அடிக்கடி நம் காதில் விழுவது, அதைச் சொல்லிப் பழக்கப் பட்டவர்கள் பொருளைக் கவனியாமல் பாசங்குசுமம் என்ப

தி-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/219&oldid=578158" இலிருந்து மீள்விக்கப்பட்டது