பக்கம்:திருக்கோலம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 - திருக்கோலம்

தைப் பாசாங்குசமும் என்று எழுதிவிட்டார்கள். குசுமம் என்பது குசமும் ஆகி விட்டது. பொருளைக் கவனியாமல் பாராயணம் செய்கிறவர்கள் அங்குச பாசாங்குசமும்’ என்று பாராயணம் செய்தார்கள்; அப்படியே எழுதியும் வைத்து விட்டார்கள். ப:சங்குசுமம் என்பதே ப. சாங் குசமும் ஆகியதென்று ஊகித்து, அபிராமி அந்தாதி மூலமும் உரையும் பதிப்பித்தபோது அந்தப் பாடத்தை அமைத்து, இங்குள்ள பாடம் ஊகித்து அறியப்பட்டது? என்று எழுதினேன். r :

பிறகு சில அபிராமி அந்தாதிப் பதிப்புகள் வந்தன. *அங்கையிற் பாசாங்குசமும் கரும்பு வில்லும் என்ற பாடம் ஒரு பதிப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்கப் பாடத்தில் மலரம்புகள் வரவில்லை. மேலும் ஒரு பதிப்பில் 'ஐங்கனே பாசாங்குசமும் கரும்பு மங்கை’ என்ற பாட ம் காணப்படுகிறது. அதில் நான்கு பொருள்களும் வந்தாலும், பாசாங்குசத்தையும், கரும்புவில் மலரம்புகளையும் சேர்த்துச் சேர்த்துச் சொல்லும் மரபுக்கு வேருக இருக்கிறது, ஐங்கணே ஒரு பக்கமும் கரும்பு ஒரு பக்கமும் இருக்கின்றன. ஆகை யால் ஊகித்த பாடமாகிய, அங்குச பாசம் குசுமம் கரும்பும் அங்கை சேர்த்தாளே என்பதே சிறந்ததாகத தோன்றுகிறது. .

அபிராமிபட்டர் பரம்பரையில் வந்தவர்கள் வைத் துள்ள கைப்பிரதியில், அங்குச பாசாங்குசமும் கரும்பும்’ என்ற பாடமே காணப்படுகிறது. அந்த வடிவத்தில் சிறிய மாறுபாடு செய்தால் ஆசிரியர் பாடிய பாடம் இது என்ப்து தெரியவரும். நான் ஊகித்த பாடம், அந்த வடிவத்தில் மிகச் சிறிய எழுத்து மாற்றம் செய்து அமைத்தது, ஆதலின் அதுவே இயல்பான பாடமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. . . - 3

. பாசம் முதலியவற்றைச் சொன்ன பிறகு ിക്കുമ மூன்று கண் உடையவள் என்று சொல்கிறர். சிவபெருமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/220&oldid=578159" இலிருந்து மீள்விக்கப்பட்டது