________________ 212.
திருக்கோலம்
ஆத்தாளலி, எங்கள் அபிராம் - வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத் தாளைப் புவியடங்கக் - -
காத்தாளை, அங்குச பாசம்
குசுமம் கரும்பும் அங்கை -
சேர்த்தாளை, முக்கண்ணி யைத்தொழு
- வார்க்கொரு தீங்கில்லையே.
[எவ்வுயிருக்கும் தாயை அடியார் கூட்டமாகிய எங்க - ளுக்கு உரிய தெய்வமாகிய.. அட்ராமவல்லிமை, உலகங்கள் * எல்லாவற்றையும் 'டேண்டாக்கியவளை, KOI துளம் பூவைப் போன்ற சிவந்த நிறம் . உடையவளை, உலகம் முழு வதும் பாதுகாத்தவளை, அங்குசம், பாசம், மலரம்புகள், கரும்புவில் ஆகியவற்றை அழகிய கையில் ஏந்தியவளை, - மூன்று கண்களை உடையவளை, : வழிபடுகிறவர்களுக்கு ஒரு வகையான தீங்கும் இல்லை. ஆத்காள்- தாய், - எங்கள். பான்றது, , தம்மையும் அடி - - யார் கூட்டத்தையும் சேர்த்துச் சொல்லியது, அண்டம் உலகம், பூத்தாள் - தோற்றுவித்தவள். அடங்க முழு வதும். . அங்குசமும் பாசமும் குசுமமும் கரும் பும் என்று உம்மையை மற்றவற்றுக்கும் . கூட்டுக. - குசுமம்:- Let; இங்கே மலரம்புகள். கரும்பு . கரும்பு வில், அம் கை. அழகிய கை, தொழுதல் இங்கே கையின் செயலைக் குறி யாமல், மூன்று கரணங்களாலும் வழிபடுவதைக் குறித்தது. ஒரு தீங்கும் என்ற உம்மை விகாரத்தால் தொக்கது. - இல்லையே, ஏகாரம், தேற்றம்]. அம்பிகையை வழிபடுபவர்களுக்கு என்றும் எங்கும் ஒரு தீங்கும் வராது. என்பது கருத்து.