பக்கம்:திருக்கோலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 திருக்கோலம்

கைக்குச் சூலி, குவினி என்ற திருநாமங்கள் உண்டாயின. இந்தப் பாட்டில் குலி என்ற பெயரைச் சொல்கிருர், அபிராமிபட்டர். - .

பத்தாவதாக வராகி என்ற நாமத்தைச் சொல்கிருர், இது வாராகி என்றும் வழங்கும். விஷ்ணு சக்திகளில் வராக அவதாரத்துக்குரியவளும், சப்த மாதாக்களில் ஒருத்தியும் வராகி என்று வழங்கப் பெறுவாள். அந்தச் சக்தியிாக் இருப்பவள் என்பது ஒரு பொருள். அம்பிகையின் படை த் தலைவியாக இருக்கும் சக்திக்குத் தண்டினி, தண்டநாதா, வராகி என்ற பெயர்கள் உண்டு. வராகிக்குப் பன்னிரண்டு திருநாமங்கள் இருக்கின்றன. த்ரிபுரா சித்தாந்தம் என்னும் நூல், பேராசக்தி வராகானந்த நாதர் என்பவருக்கு வராகத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையின் வாராகி என்னும் பெயர் பெற்ருள்? என்று கூறும். 32 செய்யுட்களால் வராகி யைத் துதிக்கும் தமிழ் நூல் ஒன்று வராகி மாலே என்ற பெயருடன் வழங்குகிறது.

சூலி, வராகி என்று இரண்டையும் இங்கே அடுத் தடுத்துச் சொல்லுவது போலவே முன்பு. வாராகி குலினி மாதங்கி (50) என்று சொன்னர். -

இப்படி உள்ள தி ரு நா மங் க ள் வேதத்திலுள்ள பொருள்களை உள்ளடக்கியவை; ஆதலின் இவற்றை, நான் மறை சேர் திருநாமங்கள்’ என்கிருர். இவை தம்ம்ை உச்சரிப்பார்களுடைய குற்றங்களை எல்லாம் போக்கும் தன்மை வாய்ந்தவை. இந்தத் திருநாமங்களை ஆன்ருேர்கள், அம்பிகையின் மெய்யன்பர்கள், பலகாலும் சொல்லிப் பயன் பெறுவார்கள். -

- என்றே செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள்

செப்புவரே r . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/24&oldid=577963" இலிருந்து மீள்விக்கப்பட்டது