பக்கம்:திருக்கோலம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் எழுதிய வடிவம் 2I

பவளம் என்று வியப்பு மீதுாரச் சொல்வதுபோலச் சொல் கிருர், -

இதழ்களினிடையே அம்பிகையின் புன்முறுவல் மலர்ந் திருக்கிறது. அதைப் பார்த்தவுடனே உள்ளம் குளிர்கிறது. அந்த முறுவல் நிலவைப்போல, ஒளியும் தண்மையும் எழிலும் இணைந்து தோன்றுகின்றது. இதழைப் பவளம் என்று சொன்னதுபோல இதழினுாடே தோன்றும் முறுவலே நிலவு என்றே சொல்கிரு.ர்.

துப்பும் நிலவும் என்று சேர்த்துச் சொன்ன குறிப்பில்ை, அவை அன்னேயின்

திருவாயில் உள்ள அதரத்தையும் புன்முறுவலேயும் உணர்த்து கின்றன என்று தெரியவரும்.

அன்னையின் புன்முறுவலப்பற்றி மூக கவி மந்தஸ்மித சதகம்’ என்று வடமொழியில் நூறு பாடல்கள் பாடியிருக் கிருர்லலிதா சகசிரநாமத்தில் அந்த முறுவலின் சிறப்பை உணர்த்தும் திருநாமங்கள் மூன்று உள்ளன. மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானஸா (28) (தன்னுடைய புன்முறுவலின் ஒளி வெள்ளத்தில் காமேசுவரருடைய திருவுள்ளத்தை முழுகச் செய்கின்றவள்) என்பது ஒரு திரு நாமம். சாருஹாஸா' (242) (அழகிய முறுவலே உடை யவள்) என்பது மற்ருெரு திருநாமம். அந்த முறுவலே திங்களின் நிலவாக இருக்கிற தென்றும் சொல்வதுண்டு. 'தரஸ்மேர முகாம்புஜா (924) என்பது ஒரு திருநாமம்’ 'சிறிது முறுவல் பூக்கும் திருமுகத்தாமரையை உடையவள்” என்பது பொருள், இவ்வாறு போற்றப்பெறும் புன்முறு வலாகிய நிலவையும் அபிராமிடட்டர் தம் கண்களில் நிறுத்துகிருர். . . . . . . .”

கொப்பை முதலில் கண்டு, அப்பால் கீழே பார்வையைத் தாழ்த்திக் குழையைத் தரிசித்து, அதை அடுத்துக் கடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/31&oldid=577970" இலிருந்து மீள்விக்கப்பட்டது