பக்கம்:திருக்கோலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன உறவு? 25

இம்மை யேதரும் சோறும் கூறையும்;

ஏத்த லாம்இடர் கெடலும் ஆம்; அம்மை யேசிவலோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுற வில்லையே?? * என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்.

அறம் என்பது, செய்யவேண்டியதைச் செய்து, விலக்க வேண்டியதை விலக்குவது. அவரவர்கள் தம் தம் நிலைக்கு ஏற்றபடி தம் தம் கடமைகளைச் சேய்து வரவேண்டும். அதுவே அறம். ... . . . -

பொருள் என்பது அறவழியில் நின்று ஈட்டும் செல்வம். இந்த உலக வாழ்வுக்கு இன்றியமையாதது பொருள்.

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லே (திருக்குறள்) என்

பது வள்ளுவர் வாக்கு. முனிவர்களே யாலுைம் இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டியவற்றைப் பொருளில்ை பெறு வார்கள். அதனல், -- - - -

'முனிவரும் மன்னரும் முன்னு

பொன்னல் முடியும்??

என்று மாணிக்கவாசகரே சொல்கிரு.ர். .

பொருளே ஈட்டுவதும் இல்லறத்தானுக்குரிய கடமை

நேர்மையான வழியில் ஈட்டிப் பிறருக்கு ஈவதோடு கடமை களே ஆற்றவும் பொருள் பயன்படும். அப்படியே மனைவி யோடு வரையறைக்கு உட்பட்ட இன்பத்தைப் பெறுவதும் உறுதிப் பொருளேயாகும். மகரிஷிகளில் பலர் தம்முடைய மனைவியரோடு வாழ்ந்தவர்கள்; அவர்களுக்கு மக்களும் உண்டு. - - ... ",

இவ்வாறு அறம் செய்து, நேர்மையான வழியில் பொருளை ஈட்டி, செய்யவேண்டியவற்றுக்காக அதைச் செலவிட்டு, மகாவியோடு இன்புற்று மக்களைப் பெற்று வாழ்வது இல்வாழ்வானுக்குரிய நல்வாழ்வு. இந்த வாழ்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/35&oldid=577974" இலிருந்து மீள்விக்கப்பட்டது