பக்கம்:திருக்கோலம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i\f

நண்பர்களின் விருப்பப்படி இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக வடிவில் வெளியிடத் தொடங்கினேன், காப்புச் செய்யுளுக்கும் முதல் இருபத்தைந்து செய்யுளுக்கும் உரிய விளக்கக் கட்டுரைகளே, எழில் உதயம்’ என்ற பெயரி லும், 26 முதல் 50 வரையில் உள்ள செய்யுட்களின் விளக் கத்தை, மாலே பூண்ட மலர்’ என்ற பெயரிலும், 51 முதல் 75 வரை உள்ளவற்றின் விளக்கத்தை, சரணம் சரணம்? என்ற பெயரிலும் வெளியிட்டேன். எஞ்சிய இருபத்தைந்து பாடல்களுக்கும் இறுதியிலுள்ள பயனுக்கும் உரிய விளக்கக் கட்டுரைகள் இப்போது திருக்கோலம்’ என்ற பெயரோடு வெளியாகின்றன,

இந்த நூலின் ஆசிரியராகிய அபிராமிடட்டர் சிறந்த பூநீவித்யா உபாசகர்; ரீவித்யையின் இரகசியங்களெல்லாம் அறிந்தவர்; அம்பிகையின் உபாசனையில் முறுகி நின்று அவளுடைய அரு சதுபவத்தைப் பெற்றவர். அவருடைய திருவாக்கு, தெளிவும் ஆழமும் உடையதாக விளங்குகிறது. தாம் பெற்ற அநுபவத்தைப் பல இடங்களில் சொல்கிரு.ர். அம்பிகையின் அருட்சிறப்பை மனம் உருக்கும் வகையில் பாடுகிருர், அவற்றைப் படிக்கும்போது நம்முடைய உள்ளமும் உருகுகிறது. அதல்ைதான் இந்த நூலேப் படிப் பவர்களும் பாராயணம் செய்து வருகிறவர்களும் பாடுகிற வர்களும் நாளுக்கு நாள் மிகுதியாகி வருகிரு.ர்கள்.

இந்த நூலேப்பற்றிப் பல மேடைகளில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது அபிராமி அந்தாதி விரிவுரைகளைப் பல அன்பர்கள் அங்கங்கே நிகழ்த்து கிருர்கள். அவர்களில் பலர் நான் எழுதிய விளக்கக் கட்டுரைகளைப் படித்து இன்புற்றதாகச் சொல்கிருர்கள். அந்த அளவில் இவை பயன்படுகிறதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது அபிராமி அந்தாதிக்குப் பலர் உரை எழுதியிருக்கிருர்கள்.

இப்படிப் பல வகையிலும் அபிராமி அந்தாதியைத் தமிழ் மக்கள் பயன்படுத்தி வருவதைக் கண்டு, அபிராமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/6&oldid=577945" இலிருந்து மீள்விக்கப்பட்டது