பக்கம்:திருக்கோலம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரணம் கழன்ற இன்பம் 5%:

அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற

ஒளிர் திருமேனியை உள்ளுதொறும் களியாகி அந்தக்கரணங்கள் விம்மி,

அந்தக்கரணங்கள் மிக மிக விரியும். மனத்துக்கு, மிக விரியும் ஆற்றல் உண்டு. சிறு பனித்துளியில் பனைமரத்தின் வடிவம் தோன்றுவதுபோல், இந்த மனம் சிறியதானுலும் பெரிய பெரிய மலேகளையெல்லாம் தன் உள்ளே அடக்கிவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஒரு கணத்தில் ஆயிரக்கணக்கான மைல்களேத் தாண்டிவிடும்.

அம்பிகையின் ஆனந்தச்சோதி வெள்ளம் பெருகப் பெருக அந்தக்கரணமும் பெருகுகின்றது; பூரிக்கிறது; விம்முகிறது; அதை உண்முகமாகக் கண்டு களிக்கிறது. இனிய கனவிலே உண்டாகும் களிப்பு அப்போது உண்டா கிறது.

அதோடு நிற்கிறதா? அந்த ஆனந்தவெள்ளம், குளத் தில் உண்டான ஊற்றில்ை வெள்ளம் பெருகிக் குளத்தை நிரப்பிப் பிறகு அதன் கரைகளே யெல்லாம் உடைத்துக் கொண்டு பரவுவதுபோலப் பெருகுகிறது; அந்தக்கரணங்க ளென்னும் கரையைக் கடந்து செல்கிறது. கரைபுரண்டு பரவுகிறது. இன்ப வெள்ளம். இப்போது ஒரே வெள்ள மயம்; கங்குகரையில்லாத ஒளிமயம்; ஆனந்தமயம். ஒரே வெளியாக, ஆகாசமாக, எல்லே தோன்ருததாக ஒர் அநு. பவம் உண்டாகிறது. அந்தக்கரணங்கள் நிரம்பி நின்ற களிப்பு நிலை இல்லே, இப்போது, அந்தக்கரணங்களே மூழ்கிப் போய்விட்டன. கரையே தெரியாத ஒரே பரப்பு, ஒரே வெளியாக இருக்கிறது. காலம், இடம் என்ற எல்லேகளே தெரியாத பரவெளியாக இருக்கிர்து. இந்த அதீத நிலையில் காண்பான், காட்சி, காணப்படும் பொருள் ஆகிய திரிபுடிகளும் மறைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/69&oldid=578008" இலிருந்து மீள்விக்கப்பட்டது