பக்கம்:திருக்கோலம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருக்கோலம்

அந்தப் பயிற்சி முற்ற முற்ற அன்னையின் வடிவம் அகத்தே நிற்கத் தொடங்கும். அப்போது உடம்பெல்லாம் புல்லரிக்கும்; உடலில் கனம் தெரியாது; ஆகாசத்தில் புறப்பதுபோல இருக்கும்; வெப்பமும் தட்பமும் உடம் புக்குத் தெரியா. உடம்பெல்லாம் அமுதம் பாய்ந்தது போல இருக்கும்; மூச்சு மிகமிக மென்மையாக இழையும், அப்போது மனம் ஒன்றையே நோக்கும். இந்த நிலையில் தான் சலனமற்ற இருப்பு உண்டாகும். அதைத்தான், 'இரும் என்ருச். -

அம்பிகையை வெளியிலே கண்ணுரக் கண்டு கண்டு, அவளுடைய அழகிய வடிவத்தை உள்ளத்திலே மீட்டும் மீட்டும் பதித்துப் பழகினல் அமைதியான நிலை உண்டாகும் . அந்த நிலையில் இருந்தால் மனம் அலேயடங்கிய கடல்போல இருக்கும்,

அத்தகைய நிலே வந்த பிறகு நிச்சயமாக அன்னேயின் அருளமுத அநுபவம் கிடைக்கும். அந்த அநுபவம் பெற்ற வர்களுக்கு இனிப் பிறப்பு இல்லை; அன்னே அவர்களே இனி மேல் இந்த உலகில் பிறக்கும்படி செய்யமாட்டாள்.

போர்த்திருமே” என்பதற்கு, மற்றப் பொருள்களைக் காணுவதுபோலப் பார்த்துக் கொண்டிருங்கள் என்று பொருள் செய்யக் கூடாது. பார்ப்பது வேறு; இருப்பது வேறு. பார்ப்பதிலும் இரண்டு வகை. அந்த இருவகைப் பார்வையும் கைகூடியவர்களுக்கு, சும்மா இருக்கும் நிலை உண்டாகும். அதுதான் மனே மெளனம்.

உடையாளே, ஒல்குசெம் பட்டுடை

யாளே, ஒளிர்மதிச்செஞ்

சடையாளே, வஞ்சகர் நெஞ்சடை

யாளேத் தயங்கும்.நுண்ணுால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/88&oldid=578027" இலிருந்து மீள்விக்கப்பட்டது