பக்கம்:திருக்கோலம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு அறுப்பவள் 79

இடையா8ள, எங்கள் பெம் மானிடை

யாளே, இங்கு என்னே இனிப்

படையாளே, உங்களே யும்படை

யாவண்ணம் பார்த்திருமே,

(நம்மவர்களே, எல்லாவற்றையும் தன் உடைமை யாகக்கொண்ட பரமேசுவரியை, தளர்ந்து அசையும் செந் நிறமுள்ள பட்டாட்ையை அன்னிந்தவன், விளங்குகின்ற சந்திரனே அணிந்த செம்மையான சடை உடையவளே, விளங்கும் நுண்ணிய நூல்போன்ற இடுப்பை உடையவளே, எங்கள் பரமேசுவரனிடமாகிய வாம பாகத்தில் இருப்பவளே, இவ்வுலகில் என்னே இனிமேல் உடலெடுத்து வரும்படி படை யாதவளே, உங்களையும் படையாத வண்ணம் அவள் திவ்ய தரிசனத்தை உள்ளும் புறமும் கண்டு, அமைதியாக இருங்கள்.

ஒல்குதல்-அசைதல், தளர்தல், பெம்மான் இடை யாள்: இடை-இடம். இங்கு-இவ்வுலகத்தில். இனி என்பது 'இப்போது என்ற பொருளில் பழைய இலக்கியங்களில் வழங்கும்; இங்கு இனிமேல்’ என்று பொருள் கொள்ள வேண்டும்.) . ."

இந்தப் பாட்டில் அடி தோறும் மடக்கு வந்தது. அம்பிகையைத் தியானம் செய்கிறவர்கள் பிறவித்

துன்பத்தை அடைய மாட்டார்கள் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 84-ஆம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருக்கோலம்.pdf/89&oldid=578028" இலிருந்து மீள்விக்கப்பட்டது