பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை தொகை, பிறவி என்னும் முழை எனப் பிறப்பு, என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. 1. இனி மகளிர் எழு பிறப்பின் கண்ணும் குடியிற் பிறவாது ஒழிக. 2. சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்களுடைய பிறவி போல (சேர்ந்தவர்களுடைய பிறவியற்ற கடுமை போல) விரைந்து முடுகுவதாக இத் தேர். 3. பிறவி என்னும் குகை. 4 பிரானுடிைய புலியூரை மறத்தல் கூடுவதொரு திவினை வருமாகில் அதல்ை சென்று சென்று (பிறப்பான் அடுப்பினும்) பிறக்க வேண்டி வந்தாலும் பின்னும் சேரத் தகும் தன்மையையுடையவர் (தலைவர்). 5. அம்பலத்து அமிழ்தாய் இருக்கின்ற இவர் நம் அல்லற் பிறவியாம் பிணியை நீக்கும் மருந்தாவர் என்னும் கருத்துள்ள பாடற்பகுதிகளே ஒளிநெறியிற் காணலாம். 120. புகழ் (129) ஒருவன் இடையருகு கிகழ்த்துவாயிைன் புகழும் பழியும் பெருகும். அங்ஙனம் நிகழ்த்தா விட்டால் அவை தாமாக கிகழா. 121. புலவோர், பெரியோர் முதலியோர் (கல்வி, கற்ருேர், என்னும் தலைப்பும் பார்க்க.) கற்றவர், தக்கோர் (சான் ருேர்), (மங்கலம் கூறும்) புலவர்கள் கூறப்பட்டுள்ளனர். அப்புலவர்களின் வளவிய திரள்களின் ஆரவாரமும் கூறப்பட்டுள்ளது. 122. புனம் (180) இரும்புனம், கடிப்புனம், கார்ப்புனம், சுனைப்புனம், தண்புனம், தாழ்புனம், தினப்புனம், தேம்புனம், தொல்