பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோவையார் உரைநடை குறிப்பு:- க. இடங்தலைப்பாடு' என்னும் இவ்வதிகாரம் 1. பொழிலிடைச் சேறல்' என்னும் இவ் ஒரு தலைப்புடன் முடிகின்றது. ச. மதி உடம்படுத்தல். மதி உடம்படுத்தல் என்பது தலைவி மீது தான் கொண்ட காதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தி அவளது அறிவை ஒரு வழிப்படுத்துதல். தலைவன் தலை வியர் இருவர் கருத்து ஒற்றுமையால் அவர் தம்முள் கூட்டம் உண்மையைத் தோழி உணர்தல். 1. பாங்கியிடைச் சேறல் (50. எளிதன்ற) அங்ங்னம் துணிந்த தலைவன், இனித் தலைவியை அடைதல் எளிதன்று. அவள் கண்ணுல் காட்டப் பட்ட காதல் தோழிக்கு நான் அடைந்த துன்பங்களே எல்லாம் குறிப்பினுல் அறிவிப்பேன்’ என்று நினைத்துத் தோழியிடம் செல்கின்ருன். 2. குறை உறத் துணிதல் (5.1. குவளை) அங்ங்னம் நினைத்துத் தோழியிடம் செனற தலை வன், (தெய்வத்தின் அருளால் தலைவியும் தோழியும் ஓர் இடத்தில் தனியாக நிற்பதைக் கண்டு) இத்தோழியைத் தன்னுடைய உயிர் என்று தலைவியின் கண் சொல்லிற்று; ஆதலால் என்னுடைய குறையை (வருத்தத்தை) இத் தோழியிடம் சொல்வேன் என்று அவள் இடம் தலைவன் பேசத் துணிந்தான். 3. வேழம் வினுதல் (52. இருங்களி) தன் குறையைப் பேசத் துணிந்த தலைவன் (என் குறை இன்னது என்று இவளுக்கு வெளிப்படையாகக்