பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

συν 9v திருக்கோவையார் உரைநடை ஒழிமின்; நும் பெயர் கூறுதல் பழி ஆகாதே, அதைக் கூறுமின்’ என்று தலைவன் வினவினன். 8. மொழிபெருது கூறல் (57. இரதமுடைய) பெயர் வினவியும் வாய் திறவாமை கண்டு இப் புனத்தில் உள்ளவர்கள் வரவேற்கத் தக்க விருந்தின ரோடு வாய் திறவாமையை விரதமாக உடையார் போலும்; அல்லது வாய் திறக்கின் சலக் என்று முத்து மணிகள் உண்மையாகவே சிந்தும் போலும். இவ் இரண்டினுள் ஒன்றுதான் வாய் திறவாமைக்குக் காரணமாக இருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்' எனத் தலைவன் கூறினன். | 9. கருத்து அறிவித்தல் (58. வின்னிற அங்ங்னம் கூறிய தலைவன் நீயிர் வாய் திறவாமைக் குக் காரணம் உடையீர் ; அது கிடக்க, இத் தழை நும் அல்குற்குத் தகுமாயின் அணிவீராமின் எனத் தழை காட்டி நின்று தன் கருத்தை அறிவித்தான். 10. இடைவினுதல் (59. கலைக்கீழ்) தழைகாட்டித் தன் கருத்தை அங்ங்னம் அறிவித்த தலைவன் நும் அல்குலும், முலையும் அதிபாரமாயிரா நின்றன. முலைக்கீழ்ச் சிறிதாயினும் ஒன்று இன்றி இவ்வுரு நிற்றல் முடியாது. ஆதலின் நுமது சிற். றிடை யாது? கண்ணுக்குத் தெரியவில்லை. சொல்லு வீராக’’ என்று மொழி பல மொழிந்தான். o, குறிப்பு:- ச. மதி உடம்படுத்தல்' என்னும் இவ்வதிகாரம் 1. பாங்கி யிடைச் சேறல்' முதலான 10 துறைகளைக் கொண்டு முடிகின்றது.